புதுடெல்லி,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் இதுவரை பிளே ஆப் சுற்றுக்கு 3 அணிகள் தகுதிபெற்றுவிட்டன. அதன்படி குஜராத் , பெங்களூரு , பஞ்சாப் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள ஒரு இடத்துக்கு மும்பை, டெல்லி அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் சாதனையை பெங்களூரு அணி சமன் செய்துள்ளது. அதிகமுறை (10) பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய அணிகளின் பட்டியலில் மும்பை அணியை சமன் செய்துள்ளது.
அதிக முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய அணிகளின் பட்டியலில் சென்னை அணி (12) முதலிடத்தில் உள்ளது.
Related Tags :