டோக்கியோ,
ஜப்பான் வேளாண் துறை மந்திரி டகு இடொ. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கியூஷா தீவில் உள்ள சாஹா மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகச்சியில் பேசிய அவர், நான் எப்போதும் கடைக்கு சென்று அரிசி வாங்குவதில்லை. எனது ஆதரவாளர்கள், கட்சிக்காரர்கள் எனக்கு அரியை பரிசாக கொடுப்பார்கள் என்றார்.
இதனிடையே, ஜப்பானில் அரிசி விலை உயர்ந்து வரும் நிலையில் மந்திரியின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜுலை மாதம் அந்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேளாண் மந்திரியின் பேச்சு அரசுக்கு எதிரான விமர்சனங்களை மேலும் அதிகரித்தது. மேலும், டகு ராஜினாமா செய்யாவிட்டால் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என்று எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை விடுத்தன.
இந்நிலையில், அரிசி வாங்குவது குறித்த சர்ச்சை கருத்தை தொடர்ந்து வேளாண் மந்திரி டகு இடொ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், தனது பேச்சுக்கு நாட்டு மக்களிடையே அவர் மன்னிப்பும் கேட்டுள்ளார்.