Airtel latest News : பாரதி ஏர்டெல்லும் கூகிளும் ஒரு பார்ட்னர்ஷிப்பை அமைத்துள்ளன. இது ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான கூகிள் ஒன் கிளவுட் ஸ்டோரேஜ் சந்தா சேவையை வழங்குகிறது. இது சாதன சேமிப்பகத்தின் குறைந்த அளவு சேமிப்புத் திறனால் உருவாகும் சவாலை எதிர்கொள்ள உதவுகிறது. அனைத்து போஸ்ட்பெய்டு மற்றும் வைஃபை வாடிக்கையாளர்களும் கூடுதல் செலவில்லாமல் ஆறு மாதங்களுக்கு 100 ஜிபி கூகிள் ஒன் கிளவுட் ஸ்டோரேஜைப் பெற முடியும். இந்த சேமிப்பகத்தை அவர்கள் கூடுதலாக ஐந்து நபர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் மற்றும் பிற டிஜிட்டல் உள்ளடக்கங்களைச் சேமிப்பதற்குக் கோப்புகளை அடிக்கடி நீக்கவோ அல்லது விலையுயர்ந்த நேரடி சேமிப்பக விரிவாக்கங்களை நாடவோ தேவையில்லாமல் சேமிக்கப் போதுமான இடம் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் பயனர்கள் எதிர்கொள்ளும் வளர்ந்து வரும் தரவு சேமிப்பக கட்டுப்பாடுகளின் சிக்கலை நிவர்த்தி செய்வதை இந்தப் பார்ட்னர்ஷிப் நோக்கமாகக் கொண்டுள்ளது. கூடுதலாக, ஆண்ட்ராய்டில் உள்ள வாட்ஸ்அப் அரட்டைகள் கூகிள் கணக்கு சேமிப்பகத்தில் பேக்-அப் செய்யப்படுகின்றன. இது வாடிக்கையாளர்களுக்கு சாதன மாற்றத்தை எளிதாக்கும். கிளவுட் ஸ்டோரேஜ் வழங்கல் ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளங்களுடன் இணக்கமானது. இது ஏர்டெல்லின் பல்வேறு வாடிக்கையாளர் தளத்திற்கு பரவலாக பயன்படுத்தக்கூடியதாக அமைகிறது.
பாரதி ஏர்டெல்லின் கனெக்டட் ஹோம்ஸ் நிறுவனத்தின் மார்க்கட்டிங் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சித்தார்த் சர்மா பின்வருமாறு கூற்னார்: “ஸ்மார்ட்போன்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை தகவலை நிர்வகிப்பதற்கான முக்கிய சாதனமாக மாறி வருவதால் சேமிப்பகம் பயனர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்கப் பிரச்சினையாக மாறியுள்ளது. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான, பாதுகாப்பான மற்றும் பயனருக்கு இணக்கமான சேமிப்பகத் தீர்வுகளை வழங்குவதன் மூலம் இந்தச் சிக்கலைத் தீர்க்க கூகிள் நிறுவனத்துடன் ஒத்துழைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தப் பார்ட்னர்ஷிப் எங்களது லட்சக்கணக்கான போஸ்ட்பெய்டு, வைஃபை வாடிக்கையாளர்களுக்குக் கூடுதலாக 100 ஜிபி சேமிப்பிடத்தை பெற உதவும்.”
கூகிள், ஏபிஏசி, பிளாட்ஃபார்ம்ஸ் & டிவைசஸ் பார்ட்னர்ஷிப்ஸ் துணைத் தலைவர் கரேன் தியோ, “இந்தியாவில் உள்ள லட்சக் கணக்கான மக்களுக்கு கூகிள் ஒன் சேவையை வழங்க ஏர்டெல் நிறுவனத்துடன் கூட்டு சேருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இணைந்து கூகிள் புகைப்படங்கள், டிரைவ், ஜிமெயில் மற்றும் பலவற்றில் அதிக சேமிப்பகத்துடன் எங்கள் பயனர்கள் தங்கள் தொலைபேசிகளில் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் முக்கியமான கோப்புகளைப் பாதுகாப்பாக பேக்-அப் செய்வதை எளிதாக்குவோம்.” என்றார்.
அறிமுகச் சலுகையாக, 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் செயல்படுத்தப்பட்ட நாளில் இருந்து முதல் ஆறு மாதங்களுக்குக் கூடுதல் கட்டணம் இல்லாமல் இது கிடைக்கும், இதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் தரவை பேக்-அப் செய்ய கிளவுட் ஸ்டோரேஜின் வசதியைப் பெறமுடியும். வாடிக்கையாளர்கள் ஏர்டெல் தேங்க்ஸ் செயலியில் உள்நுழைந்து இந்தச் சலுகையைப் பெற வேண்டும். ஆறு மாதங்களுக்கு இலவசமாக 100 ஜிபி சேமிப்பகத்தைப் பயன்படுத்திய பின் வாடிக்கையாளரின் மாதாந்திர பில்லில் மாதத்திற்கு ₹125 என்ற குறைந்த அளவு கட்டணம் சேர்க்கப்படும். சந்தாவைத் தொடர வேண்டாம் என்று வாடிக்கையாளர் எண்ணினால் அவர்கள் கூகிள் ஒன் உறுப்பினராக இருப்பதை நிறுத்திக்கொள்ளலாம்.
கூகிள் ஒன் சேமிப்பகத்தின் மூலம் அதன் உறுப்பினர்களுக்குப் பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றன:
● கூகிள் புகைப்படங்கள், டிரைவ், ஜிமெயில் ஆகியவற்றை முழுவதுமாகப் பயன்படுத்த 100 ஜிபி கிளவுட் சேமிப்பிடத்தைப் பெறலாம்.
● சேதமடைந்தாலோ அல்லது புதிய தொலைபேசிக்கு மாறும்போதோ புகைப்படங்கள், கோப்புகள் மற்றும் வாட்ஸ்அப் அரட்டைகளைப் பாதுகாப்பாக கிளவுடில் பேக்-அப் செய்யலாம்.
● கூடுதல் செலவு இல்லாமல் ஐந்து கூடுதல் நபர்களுடன் குடும்பப் பகிர்வைப் பெறலாம்.
கூகிள் ஒன் சேர்க்கப்பட்டதன் மூலம் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இப்போது தங்கள் விரல் நுனியில் டிஜிட்டல் சந்தா விருப்பங்களின் நிகரற்ற வளத்தைப் பெறுவார்கள். இது அதன் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான மற்றும் வளமான டிஜிட்டல் வாழ்க்கை முறை அனுபவத்தை வழங்குவதில் முன்னணியில் இருக்கும் ஏர்டெல்லின் நிலையை உறுதிப்படுத்துகிறது.