பாகிஸ்தான் உளவுத் துறை அதிகாரியை திருமணம் செய்ய விரும்பிய யூடியூபர் ஜோதி

இந்திய உளவாளி யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, பாகிஸ்தான் உளவுத் துறை அதிகாரியிடம் திருமணம் செய்துகொள்ளும்படி கூறிய வாட்ஸ்அப் உரையாடல் தற்போது வெளியாகியுள்ளது.

ஹரியானாவின் ஹிசாரைச் சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா(33). டிராவல் வித் ஜோ என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்த இவர் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

பாகிஸ்தானின் உளவு அமைப்பான இன்டர் சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ)- அதிகாரியாக பணியாற்றி அலி ஹாசன் உடன் ஜோதிக்கு நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது. இருவரும் அடிக்கடி வாட்ஸ்அப் உரையாடல் மூலம் பேசிவந்துள்ளதை அதிகாரிகள் இப்போது கண்டுபிடித்துள்ளனர்.

அதன்படி ஒரு உரையாடலில்,ஜோதி மல்ஹோத்ரா, “ என்னை பாகிஸ்தானில் திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று ஐஎஸ்ஐ அதிகாரியிடம் கூறியுள்ளார். இது, இஸ்லாமாபாத்துடனான அவரது உணர்ச்சிப்பூர்வமான தொடர்பை குறிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருவருக்கும் இடையே பல குறியீட்டு உரையாடல்கள், குறிப்பாக, இந்தியாவின் ரகசிய நடவடிக்கைகள் தொடர்பானவற்றையும் வாட்ஸ்அப் அரட்டை வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜோதி மல்ஹோத்ராவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு சொந்தமாக நான்கு வங்கி கணக்குகள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும், அதில் ஒரு கணக்கில் துபாயில் இருந்து பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டதும் தெரியவந்துள்ளது.

அவருக்கு எங்கிருந்து பணம் அனுப்பப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் தற்போது தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.