IPL Playoffs Tickets : ஐபிஎல் 2025 பிளே ஆப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையை நாளை முதல், அதாவது மே 24 ஆம் தேதி சனிக்கிழமை முதல் தொடங்குவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐபிஎல் தொடரின் நாக் அவுட் சுற்று ஆட்டம் என்பதால் இப்போட்டிகளை ரசிகர்களிடையே பெரும் ஆவல் இருக்கிறது. மே 24 முதல் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
பிசிசிஐ ஜொமாட்டோவுடன் பிளேஆஃப் கட்டத்திற்கான அதிகாரப்பூர்வ டிக்கெட் ஏஜென்சியாக கூட்டு சேர்ந்துள்ளது. பிளேஆப் சுற்றைப் பொறுத்தவரை நான்கு பெரிய போட்டிகள் நடக்க உள்ளன. குவாலிஃபையர் ஒன்று, எலிமினேட்டர், குவாலிஃபையர் 2 மற்றும் இறுதிப்போட்டிகள் இதில் அடங்கும். இந்த போட்டிகளுக்கான நான்கு அணிகள் தங்கள் இடங்களை ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி), மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) ஆகிய அணிகளே இந்த ஆண்டு பிளேஆப் போட்டிகளை விளையாட உள்ளன.
பிளே ஆப் போட்டி டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?
ரூபே கார்டுகளைக் கொண்ட ரசிகர்கள் எக்ஸ்க்ளூசிவ்வாக ஐபிஎல் பிளே ஆப் டிக்கெட்டுகளை பெறலாம். அவர்கள் 24 மணி நேர முன்னுரிமை அணுகல் கிடைக்கும்.
மே 24 – குவாலிஃபையர் 1 (மே 29) மற்றும் எலிமினேட்டர் (மே 30) ஆகிய இரண்டு போட்டிகளும் நியூ சண்டிகரில் உள்ள நியூ பிசிஏ ஸ்டேடியத்தில் நடைபெறும்.
மே 26 – குவாலிஃபையர் 2 (ஜூன் 1) மற்றும் இறுதிப் போட்டி (ஜூன் 3) ஆகிய போட்டிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும்.
இந்த இரண்டு போட்டிகளுக்குமான எக்ஸ்க்ளூசிவ் டிக்கெட் விற்பனை மாலை 7 மணி முதல் தொடங்குகிறது. இதன்மூலம் மற்றவர்களுக்கு முன்பே ரூபே கார்டு வைத்திருப்பவர்கள் ஐபிஎல் பிளே ஆப் டிக்கெட்டுகளை பெறலாம்.
பொது டிக்கெட் விற்பனை
உங்களிடம் ரூபே கார்டு இல்லையென்றால், கவலைப்பட வேண்டாம். எக்ஸ்க்ளூசிவ் டிக்கெட் காலம் முடிந்த சில மணி நேரங்களில் பொதுவான டிக்கெட் விற்பனை தொடங்கும்.
மே 25 இரவு 8:00 மணிக்கு – குவாலிஃபையர் 1 மற்றும் எலிமினேட்டர் (மே 30) ஆகியவற்றுக்கான டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.
மே 27 இரவு 8:00 மணிக்கு – குவாலிஃபையர் 2 மற்றும் பைனல் (அகமதாபாத்) டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.
டிக்கெட்டுகளை Zomatoவின் அதிகாரப்பூர்வ தளம் மூலம் ஆன்லைனில் வாங்கலாம். Zomato வெப்சைட் அல்லது மொபைல் செயலி மூலம் டிக்கெட் புக் செய்யலாம். ஐபிஎல் தொடரின் மிகமிக முக்கியமான போட்டிகள் என்பதால், இப்போட்டிகளை காண ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட் வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிங்க: ஐபிஎல் அணியின் ஓனர்களை ஏமாற்றிய 3 பிளேயர்கள், இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைக்காது..!!
மேலும் படிங்க: ஐபிஎல் 2025க்கு பிறகு கழட்டிவிடப்படும் 7 வீரர்கள்!