பிரபல பாலிவுட் நடிகையான ப்ரீத்தி ஜிந்தா, கடந்த 2008ஆம் ஆண்டு முதலே பஞ்சாப் அணியின் கோ-ஓனராக இருந்து வருகிறார். இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் சக உரிமையாளர்கள் மீது ப்ரீத்தி ஜிந்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஏப்ரல் 21ஆம் தேதி நடந்த எக்ஸ்ட்ரா அர்டினரி ஜெனரல் மீட்டிங் சட்டபூர்வமல்ல என கூறி சக உரிமையாளர்கள் மோகித் பெர்மன் மற்றும் நெஸ் வாடியா ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் ப்ரீத்தி ஜிந்தா.
அக்கூட்டம், நிறுவன சட்டம் மற்றும் பிற செயல்முறை விதிமுறைகளை மீறி நடத்தப்பட்டதாக, ப்ரீத்தி ஜிந்தா புகார் அளித்துள்ளார். ஏற்கனவே ப்ரீத்தி ஜிந்தா ஏப்ரல் 10ஆம் தேதி இக்கூட்டத்திற்கு எதிராக மின்னஞ்சல் மூலமாக எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அது புறக்கணிக்கப்பட்டதாகவும் கூறி உள்ளார்.
குறிப்பாக அக்கூட்டத்தில் முனீஷ் கண்ணா இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு ப்ரீத்தி ஜிந்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அக்கூட்டத்தை செல்லாது என அறிவிக்கவும் முனீஷ் கண்ணாவை இயக்குநராக செயல்பட விடக்கூடாது என்றும் அவர் வழக்கு தொடந்துள்ளார். வரும் காலத்தில் ப்ரீத்தி ஜிந்தா மற்றும் கரண் பால் இல்லாமல் கூட்டத்தை நடத்த முடியாது என தடை உத்தரவும் கோரி இருக்கிறார்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. அந்த அணி 2014ஆம் ஆண்டுக்கு பிறகு இம்முறை தான் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: ஐபிஎல் 2025: பிளே ஆப் டிக்கெட்டுகளை எப்படி வாங்குவது? – இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..!!
மேலும் படிங்க: சிஎஸ்கே வீரருக்கு ஜாக்பாட்.. ஆனா இந்திய டெஸ்ட் அணியிலிருந்து சீனியர் வீரர் நீக்கம்?