ஐபிஎல் போட்டிகள் முடிந்த பின்பு இந்திய அணி இங்கிலாந்துக்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது. கடைசியாக இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடச் சென்றது. அதில் தோல்வி அடைந்து இருந்தாலும், ஆஸ்திரேலியா தொடரில் இடம் பெற்ற வீரர்கள் இங்கிலாந்து தொடரிலும் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வை அறிவித்து உள்ளதால் அவர்களுக்கு பதிலாக புதிய வீரர்கள் இடம் பெற உள்ளனர். ஆஸ்திரேலியா தொடரில் தனி ஆளாக போராடி இருந்தார் பும்ரா, இதனால் பெரிய காயமும் அவருக்கு ஏற்பட்டது.
மேலும் படிங்க: நீதிமன்றம் சென்ற ப்ரீத்தி ஜிந்தா.. பஞ்சாப் அணியின் பிரச்சனை என்ன?
பும்ரா விலகல்?
இந்நிலையில் இங்கிலாந்து தொடர் தொடங்குவதற்கு முன்பு பிசிசிஐ-யிடம் சில கோரிக்கை வைத்துள்ளார் பும்ரா. தன்னால் 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட முடியாது என்றும், அதிகபட்சம் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாட முடியும் என்று பும்ரா பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகளிலும் விளையாடியதால் முதுகு பகுதியில் மீண்டும் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் பந்து வீசவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பம்பராவிற்கு முதுகு பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதிலிருந்து அதிக நேரம் அவரால் பந்து வீச முடியவில்லை.
இந்திய அணியின் பௌலிங் தூணாக பும்ரா இருந்து வரும் நிலையில் அவர் விளையாடாமல் போனால் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும். ரோஹித் சர்மாவிற்கு பிறகு கேப்டன்சி பொறுப்பை பும்பராவிடம் கொடுக்கலாம் என்றும் பிசிசிஐ திட்டம் வைத்திருந்தனர். ஆனால் அவருக்கு ஏற்படும் காயம் காரணமாக கேப்டன்ஷி பதவியை கொடுப்பதில் சிக்கலும் ஏற்பட்டுள்ளது. பும்ரா இல்லை என்றால் அர்ஷ்தீப் சிங் அல்லது அன்சுல் கம்போஜ் அணியில் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது.
புதிய கேப்டன் யார்?
ரோகித் சர்மாவிற்கு பதில் சுப்மான் கில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியை வழி நடத்தி இருந்தார் சுப்மான் கில். மேலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் துணை கேப்டன் ஆகவும் கில் அறிவிக்கப்பட்டார். தற்போது ரோகித் சர்மா ஓய்வை அறிவித்துள்ளதால் புதிய டெஸ்ட் கேப்டனாக சுப்மான் கில் பெறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் துணை கேப்டனாக ரிஷப் பந்த் இருப்பார் என்றும் கூறப்படுகிறது. ஐபிஎல்-ல் மோசமாக விளையாடி வந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்த் சிறந்த பார்மில் உள்ளார். எனவே அவர் துணை கேப்டனாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தொடரில் சாய் சுதர்சன் மற்றும் கருண் நாயர் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிங்க: ஐபிஎல் 2025: பிளே ஆப் டிக்கெட்டுகளை எப்படி வாங்குவது? – இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..!!