புதுடெல்லி: நாட்டில் மீண்டும் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் டெல்லியில் இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் கரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள், ஆக்சிஜன் மற்றும் மருந்து, மாத்திரைகளை தயார் நிலையில் வைத்திருக்கும்படி அனைத்து மருத்துவமனைகளுக்கும் அரசு நேற்று அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 3 ஆக உயர்ந்தது. விசாகப்பட்டினம், மத்துலபாளையம் பகுதியில் 28 வயது பெண் ஒருவருக்கும் நந்தியாலா மாவட்டம், சீகலமர்ரி எனும் ஊரில் 75 வயது மூதாட்டிக்கும் கடப்பாவில் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.