Indian weather forecast, government weather app : வானிலை அறிவிப்புகளை முன்கூட்டியே தெரிவிக்கும் மௌசம் என்ற செயலியை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. புவி அறிவியல் அமைச்சகத்தின் (MoES) கீழ் உள்ள இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD), நிகழ்நேர வானிலை அப்டேட்கள், முன்னறிவிப்புகள், ரேடார் படங்கள் மற்றும் வெப்ப அலைகள் மற்றும் கனமழை போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளுக்கான எச்சரிக்கைகளை மௌசம் பிரத்யேக மொபைல் செயலி வழங்கும். வெப்பநிலை மற்றும் கனமழை அதிகரித்து வருவதாலும், கணிக்க முடியாத வானிலை அடிக்கடி ஏற்பட்டு வருவதாலும், மௌசம் செயலி உள்ளூர் மற்றும் நேஷ்னல் முன்னறிவிப்புகளைப் (Forecasts) பற்றிய லேட்டஸ்ட் தகவலை கொடுக்கும். வரவிருக்கும் வானிலை நிலைமைகளுக்கு தயாராகும் வகையில், மக்களை எச்சரிக்கை அறிவிப்புகளையும் இந்த செயலி வழங்கும். உங்கள் Android மற்றும் iOS சாதனங்களில் மௌசம் செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்து நிறுவுவது என்பது இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
ஆண்ட்ராய்டில் மௌசம் செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?
1. உங்கள் Android தொலைபேசியில் Google Play Store -ஐத் திறக்கவும்.
2. Search-ல் “Mausam app- IMD”-ஐத் தேடவும்.
3. IMD – AAS ஆல் உருவாக்கப்பட்ட செயலியைத் தேடுங்கள்.
4. செயலியைப் பதிவிறக்கி இன்ஸ்டால் செய்யவும்.
5. மௌசம் செயலி நிறுவப்பட்டதும், செயலியைத் திறந்து இருப்பிடம் மற்றும் அறிவிப்புகளுக்குத் தேவையான அனுமதிகளை கொடுக்கவும்.
iOS-ல் Mausam செயலியை எவ்வாறு பதிவிறக்குவது?
1. உங்கள் iPhone-ல் App Store -ஐத் திறக்கவும்.
2. தேடல் பட்டியைப் பயன்படுத்தி “Mausam IMD” ஐத் தேடவும்.
3. இந்திய வானிலை ஆய்வுத் துறை வழங்கும் செயலியைக் கண்டறியவும்.
4. செயலியை நிறுவ Get என்பதைத் தட்டவும்.
5. நிறுவிய பின், செயலியைத் திறந்து அறிவிப்புகள் மற்றும் இருப்பிட அணுகலுக்கான அனுமதியை வழங்கவும்.
கனமழை மற்றும் வெப்ப அலை எச்சரிக்கைகளை எவ்வாறு இயக்குவது?
1. உங்கள் சாதனத்தில் Mausam செயலியைத் திறக்கவும்.
2. தேவையான அனுமதிகளை கொடுக்கவும் – இருப்பிடம், அறிவிப்புகள் போன்றவை.
3. IMD ஆல் வழங்கப்பட்ட வானிலை எச்சரிக்கைகள் பற்றிய அறிவிப்புகளைப் பெறத் தொடங்குவீர்கள்.
4. இப்போது, செயலியின் அமைப்புகளுக்குச் சென்று, “Rain Warning” விருப்பத்தைத் கிளிக் செய்யவும்.
நீங்கள் தேர்ந்தெடுத்த பகுதிகளைப் பொறுத்து, தீவிர மழை, வெப்ப அலைகள், இடியுடன் கூடிய மழை மற்றும் சூறாவளி போன்ற எச்சரிக்கைகளுக்கான புஷ் நோடிபிகேஷன்களை இந்த ஆப் அனுப்பும். இந்த எச்சரிக்கைகள் IMD ஆல் வழங்கப்படக்கூடியதாகும்.
மௌசம் செயலியின் அம்சங்கள்
மௌசம் செயலி என்பது ஏற்கனவே இருக்கும் வானிலை செயலியைப் போன்றது தான். இது பயனர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சமீபத்திய மற்றும் புதுப்பிக்கப்பட்ட வானிலை நிலைகளைச் சரிபார்க்க அனுமதிக்கிறது. இது மட்டுமல்லாமல், வெப்ப அலை, இடியுடன் கூடிய மழை அல்லது வேறு ஏதேனும் சாத்தியமான வானிலை ஆபத்துகளுக்கான அப்டேட் செய்யப்பட்ட அறிவிப்புகளையும் இந்த ஆப் வழங்குகிறது.