டெல்லி,
இந்தியாவின் அண்டை நாடு மாலத்தீவு. அரபிக்கடலில் அமைந்துள்ள தீவுநாடான மாலத்தீவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவில் கடந்த ஆண்டு பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, இரு நாடுகளும் மேற்கொண்ட பேச்சுவார்த்தையையடுத்து இருநாட்டு உறவும் மீண்டும் சுமூக நிலைக்கு திரும்பியது.
இதையடுத்து, இரு தரப்பு வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் மேலும் வளர்ச்சியடைந்தது. அதேபோல், மாலத்தீவுக்கு இந்தியா நிதியுதவியுடன் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், 3 நாட்கள் அரசு முறை பயணமாக மாலத்தீவு வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா கலீல் இந்தியா வந்துள்ளார். அவர் இன்று டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இரு தரப்பு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதேபோல், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மாலத்தீவு அரசு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ஆதரவு அளிப்பதாக மாலத்தீவு வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா கலீல் தெரிவித்துள்ளார்.