மும்பை,
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அந்த வகையில் மராட்டிய மாநிலத்தில் நேற்றுமுதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதன்படி, மராட்டியத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கனமழை காரணமாக மும்பையின் வொர்லி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ள இந்த மெட்ரோ ரெயில் நிலையம் கடந்த 10ம் தேதி திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
தற்போது கனமழை காரணமாக மெட்ரோ ரெயில் நிலைய தண்டவாளம், பயணிகள் நடைமேடை உள்பட பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால், அந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.