IPL 2025 Most Unexpected Valuable Player: ஐபிஎல் 2025 தொடரில் வரும் மே 29ஆம் தேதி பிளே ஆப் சுற்று தொடங்குகிறது. குவாலிபயர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் நியூ சண்டிகர் முலான்பூர் நகரிலும், குவாலிபயர் 2 மற்றும் இறுதிப்போட்டி குஜராத் அகமதாபாத் நகரிலும் நடைபெற உள்ளது.
குஜராத், பெங்களூரு, பஞ்சாப், மும்பை உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் சென்றாலும் எந்தெந்த அணிகள், எந்தெந்த பிளே ஆப் போட்டிகளில் விளையாடப்போகின்றன என்பது இன்னும் உறுதியாகவில்லை. இன்றும், நாளையும் நடைபெறும் லீக் சுற்று போட்டிகள்தான் அதை முடிவு செய்யும் எனலாம்.
IPL 2025: யாரும் எதிர்பார்க்காத இந்த 3 வீரர்கள்
அந்த வகையில், ஐபிஎல் 2025 தொடரில் பல புதிய வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிக கவனம் பெற்றிருந்தாலும் தற்போது இவர்கள் உலகம் முழுவதும் புகழ்பெற்றிருக்கின்றனர். அந்த வகையில், இந்த ஐபிஎல் தொடரில் வாங்கிய சம்பளத்திற்கு அதிகமாகவும், சிறப்பாகவும் விளையாடிய யாருமே எதிர்பார்க்காத 3 வீரர்களை இங்கு காணலாம்.
IPL 2025: திக்வேஷ் ராத்தீ
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இந்தாண்டு அதிகம் கவனம் ஈர்த்த இந்தியர் என்றால் அது இவர்தான். இந்த சீசனில் அந்த அணிக்கு அதிக விக்கெட்டுகளை எடுத்தவரும் இவர்தான். 12 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். எக்கச்சக்க அபராதங்கள், ஒரு போட்டியில் தடை என சர்ச்சைகளுக்கு பெயர் போன இவர் ஆர்சிபிக்கு எதிரான நாளைய போட்டியில் நிச்சயம் இடம்பெறுவார். இவரை வெறும் ரூ.30 லட்சத்திற்கே லக்னோ அணி வாங்கியது.
IPL 2025: அனிகேத் வர்மா
சன்ரைசர்ஸ் அணிக்கு இந்த சீசன் சிறப்பாக போகவில்லை. கடைசி 3 போட்டிகளில் அதிரடியாக வென்றாலும் தொடரின் மத்தியில் பெரும் அளவில் சொதப்பிவிட்டது. கடந்த தொடரில் நிதிஷ் குமார் ரெட்டி கிடைத்தது போல் இந்தாண்டு அனிகேத் வர்மா கிடைத்ததே அவர்களுக்கு பெரிய ஆறுதல் ஆகும். 14 போட்டிகளில் 236 ரன்களை அடித்துள்ளார், இதில் 20 சிக்ஸர்களும் அடக்கம். அதிகபட்சமாக 74 ரன்களை அடித்திருக்கிறார். இவரையும் சன்ரைசர்ஸ் அணி ரூ.30 லட்சத்திற்கே வாங்கியது.
IPL 2025: விப்ராஜ் நிகம்
20 வயதான விப்ராஜ் நிகம் இந்தாண்டு யாரும் எதிர்பார்க்காத வீரர் எனலாம். இவர் டெல்லி அணிக்கு சிறந்த ஆல்-ரவுண்டராக இருந்துள்ளார். 13 இன்னிங்ஸ்களில் பந்துவீசி 11 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். பேட்டிங்கில் 8 இன்னிங்ஸ்களில் 142 ரன்களை அடித்துள்ளார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 179.74 ஆக உள்ளது. இப்படிப்பட்ட ஆல்-ரவுண்டர் நிச்சயம் வருங்காலத்தில் இந்தியாவுக்கும் தேவைப்படுவார்.