மும்பை,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். இறுதி கட்டத்தை நெருங்குகிறது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரின் லீக் சுற்று இன்றுடன் நிறைவடைய உள்ளது. இதன் முடிவில் பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
பிளே ஆப் சுற்று 29-ம் தேதி தொடங்க உள்ளது. இறுதிப்போட்டி ஜூன் 3-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த 4 அணிகளில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில் நடப்பு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகள் குறித்து இந்திய முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா தனது கணிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது கணிப்பின்படி, “பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு” ஆகிய அணிகள் இறுதிப்போட்டியில் மோதும் என்று கூறியுள்ளார்.