சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2025-ல் தனது பயணத்தை முடித்துள்ளது. இருப்பினும் இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு மறக்க வேண்டிய ஒரு சீசன் ஆக அமைந்துள்ளது. 14 போட்டிகளில் விளையாடி வெறும் நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்துள்ளார். மேலும் தொடர்ந்து இரண்டு சீசன்களாக பிளே ஆப்க்கு தகுதி பெறாமல் இருப்பதும் இதுவே முதல் முறை. மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிராக மட்டுமே தங்களது வெற்றிகளை பதிவு செய்துள்ளனர். சென்னை அணியின் மோசமான தோல்விக்கு அவர்களின் பேட்டிங் ஆர்டர் முக்கிய காரணமாக அமைந்தது.
மேலும் படிங்க: பட்லர் To மார்கோ யான்சன்: ஐபிஎல் பிளே ஆஃப்பை தவறவிடும் 7 வீரர்கள்!
இருப்பினும் காயத்தால் அணிக்குள் வந்த மாற்று வீரர்களின் காரணமாக தற்போது சென்னை அணி சரியான பாதையில் சென்றுள்ளது. குறிப்பாக கடைசி சில போட்டிகளில் பேட்டிங்கில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். ஆயுஷ் மாத்ரே, உர்வில் படேல், டெவால் பிரவீஸ் போன்ற வீரர்கள் அணிகள் வந்து டாப் ஆர்டரை ஒட்டுமொத்தமாக மாற்றியுள்ளனர். பவர்பிளேயில் ரன்களை கொண்டு வருவது, மிடில் ஓவர்களில் சரியான ரன் ரேட்டை பராமரிப்பது என்று சிறப்பாக விளையாடினர். இதனால் அடுத்த ஆண்டு சென்னை அணி மிகவும் பலம் வாய்ந்த அணியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தோனிக்கு பிறகு விக்கெட் கீப்பர் யார்?
தோனி அடுத்த ஆண்டு விளையாடுவது சந்தேகத்தில் உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு விக்கெட் கீப்பர் பேட்டர் தேவை. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சனை டிரேடு செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இருப்பினும் இது எந்த அளவு உண்மை என்று தெரியாததால் ரசிகர்களும் குழப்பத்தில் உள்ளனர். சஞ்சு சாம்சன் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ஒருவேளை சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கு வந்தால் சென்னை அணியில் இருந்து ஏதாவது ஒரு வீரரை ராஜஸ்தான் ராயல் கேட்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
ஆனால் சென்னை அணியின் வருங்கால விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக உர்வில் படேல் தான் இருப்பார் என்று கூறப்படுகிறது. இந்த சீசனில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மூன்று போட்டிகளில் விளையாடி உள்ள உர்வில் படேல் 212 ஸ்ட்ரைக் ரேட்டில் 68 ரன்கள் அடித்துள்ளார். வந்த முதல் பாலில் இருந்து சிக்ஸர்கள் அடிக்க துடிக்கும் இவர் டி20 போட்டிகளுக்கு ஒரு சிறந்த வீரராக கருதப்படுகிறார். எனவே தோனிக்கு பிறகு சென்னை அணியில் விக்கெட் கீப்பராக உர்வில் படேல் செயல்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் உர்வில் படேல் டாப் ஆர்டரில் விளையாடுகிறார். தோனி போல பினிஷிங் செய்ய ஒரு வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெறும் மினி ஏலத்தில் அதனை சரி செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிங்க: ஒரு ட்வீட் அல்லது இன்ஸ்டாகிராம் பதிவு பார்ப்பீர்கள்.. தோனி ஓய்வு குறித்து உத்தப்பா!