அமெரிக்காவில் கடந்த மாதம் ‘ராமர் கற்பனை’ என்று பேசிய ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரிய புகாரை வாரணாசியில் உள்ள உத்தரப் பிரதேச எம்.பி-எம்.எல்.ஏ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்ததாக வழக்கறிஞர் ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். ரேபரேலியைச் சேர்ந்த எம்.பி. ராகுல் காந்திக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மக்களவை சபாநாயகரின் அனுமதி இல்லாததால், இந்த மனுவை ஏற்கமுடியாது என்று கூறி கூடுதல் தலைமை நீதித்துறை நீதிபதி நீரஜ் குமார் திரிபாதி புகாரை நிராகரித்தார். ராமரை “புராண […]
