RCB vs LSG: ஐபிஎல் தொடரின் 70வது லீக் ஆட்டம் அல்லது கடைசி லீக் ஆட்டம் இன்று லக்னோ ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ஜிதேஷ் சர்மா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இரவு 7 மணிக்கு டாஸ் வீசப்பட்ட நிலையில், அதனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி லக்னோ அணி பேட்டிங் செய்தது. இப்போட்டியில் மார்க்ரமுக்கு பதிலாக பிரீட்ஸ்கே களம் இறக்கப்பட்டார். ஆனால் அவர் பெரிதாக சோபிக்கவில்லை. இதையடுத்து மிட்செல் மார்ஷ் மற்றும் ரிஷப் பண்ட் சேர்ந்து பந்துகளை பவுண்டரிகளுக்கு அனுப்பினர். இவர்களை ஆர்சிபி பந்து வீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை.
100 ரன்களை கடந்தது இந்த பார்ட்னர்ஷிப். ஒரு கட்டத்தில், அரைசதம் கடந்த பின்னர் மிட்செல் மார்ஷ் ஆட்டமிழந்தார். ஆனால் தொடர்ந்து விளையாடிய ரிஷப் பண்ட், சதம் விளாசினார். அவரை விமர்சித்தவர்களுக்கு பதலடி கொடுக்கும் விதமாக இந்த சதம் அமைந்தது. பல்டி அடித்து கொண்டாடினார். இறுதியில் லக்னோ அணி 227 ரன்களை எடுத்தது. ரிஷப் பண்ட் 118 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனைத் தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கினர். ஃபில் சால்ட் விரைவில் ஆட்டமிழந்தாலும், விராட் கோலி களத்தில் நின்று அரைசதம் அடித்த பின்னரே வெளியேறினார். இதையடுத்து மயங்க் அகர்வால் மற்றும் ஜிதேஷ் சர்மா சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.
இறுதி வரை நின்று போட்டியை முடித்தும் வைத்தார். 228 ரன்கள் என்ற பெரிய இலக்கை 18.4 ஓவர்களில் சேஸ் செய்ய ஜிதேஷ் சர்மாவின் அதிரடி பெரிய உதவியாக இருந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் அணி இப்போட்டியில் வென்றதன் மூலம், குவாலிஃபையர் 1க்கு தகுதி பெற்றுள்ளது. குவாலிஃபையர் 1ல் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோத உள்ளது. அப்போட்டி நாளை மறுநாள் (மே 29) நடைபெற உள்ளது.
மேலும் படிங்க: தோனி To ஃபாஃப் டு பிளெசிஸ்: ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வயதான கேப்டன்களின் பட்டியல்!
மேலும் படிங்க: IPL Final: மும்பை இந்தியன்ஸ் இல்ல.. “ஆர்சிபி அணிக்கும்…” அடித்து சொல்லும் முன்னாள் சிஎஸ்கே வீரர்!