சென்னை: வெற்றிப் பாதைக்கு வித்திட்ட ‘நான் முதல்வன்..’ திட்டம் என இந்த திட்டத்தின்மூலம் பயன்பெற்ற வெற்றியாளர்களை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். கடந்த முறை தேர்ச்சி பெற இயலாதவர்கள் சோர்ந்து போகாதீர்கள். எட்டி விடும் தொலைவில் இருக்கும் வெற்றிக்கோட்டைத் தொட்டுவிடுங்கள் என்றும் கூறினார். இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் , நான்_முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்று 2024-ஆம் ஆண்டு IFoS பணியிடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைச் சந்தித்துப் பாராட்டினேன். UPSC குடிமைப் பணித் […]