வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடர்; இங்கிலாந்து முன்னணி வீரர் விலகல்

லண்டன்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 29ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் ஒருநாள் போட்டிகளும் அதனை தொடர்ந்து டி20 போட்டிகளும் நடைபெறுகிறது.

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் கஸ் அட்கின்சன் இடம் பெற்றிருந்தார்.

இந்நிலையில், கஸ் அட்கின்சனுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடரில் விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு பதிலாக எந்த ஒரு மாற்று வீரரையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிக்கவில்லை.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.