ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதில் தமிழக வீரர் சாய் சுதர்சன் இடம் பிடித்திருக்கிறார். இந்த நிலையில், சாய் சுதர்சனை அணியில் சேர்க்க கூடாது என கெளதம் கம்பீர் கூறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இச்சூழலில் கெளதம் கம்பீர் ஏன் சாய் சுதர்சனை அணியில் சேர்க்க மறுக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சாய் சுதர்சன் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ரஞ்சி டிராபி தொடரிலும் இங்கிலாந்து கவுண்டி டெஸ்ட் தொடரிலும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்து வருகிறார். ஏன், நடப்பு ஐபிஎல் தொடரில் கூட சிறப்பாக விளையாடி 600 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.
அப்படி இருக்கையில், கெளதம் கம்பீர் சாய் சுதர்சனை அணியில் சேர்க்க மறுப்பு தெரிவித்துள்ளார். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்துள்ள நிலையில், அவர்களின் இடத்தை நிறப்ப அவர்களுக்கு இணையான வீரரை விளையாட வைக்க வேண்டிய நிலை உள்ளது.
டாப் ஆர்டரில் கில், ஜெய்ஸ்வால், கே எல் ராகுல் ஆகியோர் இருந்தாலும், மாற்று வீரர்கள் என்ற அடிப்படையில் சாய் சுதர்சனுக்கு இடம் அளிக்க வேண்டி இருக்கிறது. அவர் முதல் 4 வரிசையிலும் சிறப்பாக விளையாட கூடிய திறன் அவரிடம் உள்ளது. ஆனால் சில காரணங்களால் அவரை கெளதம் கம்பீர் சேர்க்க வேண்டாம் என கூறி இருக்கிறார்.
இதையடுத்து சும்பன் கில், சாய் சுதர்சனுக்கு ஆதரவாக பேசி அவருடய அனுபவத்தை கெளதம் கம்பீரிடம் கூறி உள்ளார். அவரால், எப்படி இந்திய அணிக்கு உதவ முடியும் என்பதை சுப்மன் கில், கெளதம் கம்பீர் விளக்கி உள்ளார். இதையடுத்து தான் கெளதம் கம்பீரை அவரை அணியில் சேர்க்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிங்க: RCB IPL final history: ஆர்சிபி எத்தனை முறை இறுதி போட்டிக்கு சென்றுள்ளது? முழு விவரம்!
மேலும் படிங்க: ஐபிஎல் 2025 பிளே ஆப் : போட்டி அட்டவணை, இடம், தேதி, நேரடி ஒளிபரப்பு – முழு விவரம்