சிஎஸ்கேவில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? யூடியூப் சேனலில் சொன்ன பதில்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அனைத்து போட்டிகளும் முடிவடைந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் அவரது யூடியூப் பக்கத்தில் ரசிகர்களின் கமெண்ட் மற்றும் கருத்துக்களுக்கு பதில் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் 9.75 கோடிக்கு எடுத்தது. இவர் மீது அதிகம் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இந்த சீசன் முழுவதும் அஸ்வின் 7 மட்டுமே எடுத்துள்ளார். அதேபோல பேட்டிங்கிலும், டாப் ஆர்டரில் இறங்கிய பொழுது ரன்கள் அடிக்கவில்லை. இதனால் பலரும் அஸ்வினின் மீது கோபத்தில் இருந்தனர். அஸ்வின் சென்னை அணையில் இணைந்த போது எவ்வளவு வரவேற்றார்களோ,  அதே அளவிற்கு இப்போது எதிர்ப்பு உள்ளது.

மேலும் படிங்க: தோனி To ஃபாஃப் டு பிளெசிஸ்: ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வயதான கேப்டன்களின் பட்டியல்!

யூடியூப் லைவில் பேசிய போது ரசிகர் ஒருவரின் கமெண்டிற்கு பதில் அளித்துள்ளார் அஸ்வின். “வணக்கம் அஸ்வின் உங்கள் மீது அதிக மதிப்பும் மரியாதை உள்ளது, ஆனால் தயவு செய்து என்னுடைய அழகான சென்னை அணியில் இருந்து வெளியேறுங்கள்” என்று கமெண்ட் செய்திருந்தார். இதற்கு அஸ்வின் எமோஷனலாக பதில் அளித்துள்ளார், இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. “இப்படி ஒரு கேள்வியை கேட்கும் ரசிகரின் மனதில் சிஎஸ்கேவின் மீது எவ்வளவு ஆழமான காதல் இருக்கிறது என்பதை நான் உணர்கிறேன். ஆனால் ஒரு தவறை மட்டும் யாரும் செய்ய வேண்டாம். நீங்கள் ஒரு விஷயத்தை செய்யும் போது அது சரியானதா என்பதை முடிவு செய்யுங்கள்.

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது எனக்கு நன்றாக புரிகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நீங்கள் எவ்வளவு அன்பாக இருக்கிறீர்களோ அதே அன்பும், அக்கறையும் எனக்கும் உள்ளது. எந்த ஒரு வீரரும் ஒரு அணி மோசமாக செயல்பட வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். நானும் அதைத்தான் நினைக்கிறேன். அணியின் தலைவர் என்னிடம் பந்தை கொடுத்து பந்து போட சொன்னால் அல்லது பேட்டிங் இறங்க சொன்னால் நான் இறங்கி தான் ஆக வேண்டும்” என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இந்த சீசனில் அஸ்வின் பவர் பிளேயில் மிகவும் மோசமாக பந்து வீசியிருந்தார். சில போட்டிகளில் இவரது  பந்துவீச்சும் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் இது குறித்தும் அஸ்வின் பேசியுள்ளார். “நான் இந்த சீசனுக்காக அதிகமான கடின உழைப்பை போட்டுள்ளேன். ஆனால் சில விஷயங்களை நான் மாற்றிக் கொள்ள வேண்டும். அது எனக்கு நன்றாக புரிகிறது, குறிப்பாக பவர் பிளேயில் நான் பந்து வீசும் போது அதிகமாக ரன்களை விட்டுக் கொடுத்தேன். எனக்கு அடுத்த ஆண்டு அதிக விருப்பம் இருக்கிறது, நான் என்னுடைய சிறந்த பவுலியை கொடுக்க முடியும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த சீசனில் எதுவுமே சிறப்பாக அமையவில்லை. விளையாடிய 14 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளனர். மேலும் இதுவரை விளையாடிய அனைத்து சீசனங்களிலும் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தை பிடிப்பது இதுவே முதல்முறை. இருப்பினும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தி இருந்தனர். அடுத்த ஆண்டிற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்தி உள்ளனர்.

மேலும் படிங்க: IPL Final: மும்பை இந்தியன்ஸ் இல்ல.. “ஆர்சிபி அணிக்கும்…” அடித்து சொல்லும் முன்னாள் சிஎஸ்கே வீரர்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.