சென்னை: ‘மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிக நிலைப்பாட்டை பொறுத்திருந்து பாருங்கள்’ என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
இதுகுறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் சாதக, பாதகங்களை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும். இதற்கு ஒற்றை வரியில் பதில் அளிக்க முடியாது. முதல்வர் ஸ்டாலின் எதற்காக டெல்லி சென்றார் என்பதை அவர்தான் கூறவேண்டும். இதனால் தமிழக மக்கள் பயன் அடைந்தால் வரவேற்போம்.
அதேபோல், அமலாக்கத் துறையும் சோதனைக்குப் பிறகு விளக்கம் அளிக்க வேண்டும். தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டனை பெற்றே தீர வேண்டும்.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேமுதிக நிலைப்பாடு என்ன என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள். பொறுமை கடலினும் பெரிது. அடுத்த சட்டப்பேரவை தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக ஜன.7-ம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்,.