Who is malavika nayak: நேற்று (மே 27) ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டம் நடைபெற்றது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இந்த ஐபிஎல் தொடரில் மோசமான ஃபார்மில் இருந்து வந்த ரிஷப் பண்ட் இப்போட்டியில் சதம் அடித்ததன் மூலம் அவரது ஃபார்மை மீட்டெடுத்தார். சதம் அடித்ததை கொண்டாடும் விதமாக சம்மர்சால்ட்டும் அடித்தார்.
அப்போது கேமரா விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவை நோக்கி சென்றது. அவர் சற்று கவலையுடன் இருந்தார். ஆனால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது அனுஷ்கா சர்மா அருகில் இருந்த பெண் தான். காரணம் பண்ட் சம்மர்சால்ட் அடித்து தனது சதத்தை கொண்டாடியதற்கு முட்டாள்தனம் என முணுமுணுத்தது பலரையும் கவனிக்க வைத்தது. இந்த நிலையில், ரிஷப் பண்ட்டை திட்டிய அந்த பெண் யார் என ரசிகர்கள் தேடி வருகின்றனர்.
ரிஷப் பண்ட்டை மாளவிகா நாயக் திட்டிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. போட்டிகளின் போது மாளவிகா நாயக் அனுஷ்கா சர்மாவுடன் அடிக்கடி காணப்படுவார்.
யார் இந்த மாளவிகா நாயக்?
மாளவிகா நாயக் ஒரு அனுபவம் வாய்ந்த வணிக மற்றும் சந்தைப்படுத்தல் நிபுணர். இந்தத் துறையில் அவருக்கு பல வருட அனுபவம் உள்ளது. இன்டெலெனெட் (செர்கோ) போன்ற பெரிய நிறுவனங்களின் ஐடி மற்றும் அவுட்சோர்சிங் துறைகளில் பணியாற்றியுள்ளார். பின்னர், எஸ்எம்எஸ் அடிப்படையிலான தேடல் சேவைகளை வழங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனமான இன்னோஸ் டெக்னாலஜிஸில் சேர்ந்தார்.
மாளவிகாவுக்கு வணிக மேம்பாடு, விற்பனை, கூட்டாண்மை மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் அனுபவம் உள்ளது. மார்க்கெட்டிங்கில் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார். பெரிய வாடிக்கையாளர்களுடன் பணிபுரிந்த அனுபவம், தயாரிப்பு மேம்பாட்டிற்காக தொழில்நுட்ப குழுக்களுடன் ஒத்துழைத்தல் மற்றும் நிறுவனங்களின் வருவாயை அதிகரிப்பதில் கவனம் செலுத்துதல். சட்ட ஒப்பந்தங்கள் மற்றும் வணிகச் சட்டங்களை விளக்குவதிலும் அவருக்கு அறிவு உள்ளது.
மேலும் படிங்க: இந்த தமிழக வீரரை அணியில் சேர்க்க கூடாது.. கெளதம் கம்பீர் அடம்!
மேலும் படிங்க: RCB IPL final history: ஆர்சிபி எத்தனை முறை இறுதி போட்டிக்கு சென்றுள்ளது? முழு விவரம்!