சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது ஐபிஎல் 2025 பயணத்தை முடித்துள்ளது. இந்த சீசன் தொடக்கத்தில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான வெற்றியை பெற்றிருந்தாலும், அதனை தக்க வைத்துக் கொள்ள தவறினர். தொடர் தோல்விகளை சந்தித்த பின்னர் சீசனில் மொத்தமாக நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றியை பதிவு செய்துள்ளனர். தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக இமாலய வெற்றியை பதிவு செய்தனர். இதன் மூலம் அடுத்த ஆண்டு பலம் வாய்ந்த அணியாக மீண்டு வருவோம் என்பதை அனைத்து அணிகளுக்கும் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிங்க: தோனி To ஃபாஃப் டு பிளெசிஸ்: ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வயதான கேப்டன்களின் பட்டியல்!
ருதுராஜ் கெய்க்வாட் காயம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த ஆண்டு மீண்டும் கேப்டன்சி பொறுப்பை தோனி ஏற்றுக்கொண்டார். காரணம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்க்கு கையில் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு அவர் இந்த சீசனில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகினார். இதனால் தோனி மீண்டும் கேப்டன்சியை ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இருப்பினும் அணியை தோல்வியிலிருந்து யாராலும் மீட்க முடியவில்லை. அவருக்கு பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்பட்டார். மும்பையை சேர்ந்த ஆயுஸ் மாத்ரே ருதுராஜ் கெய்க்வாட்க்கு பதிலாக சென்னை அணியில் இடம் பெற்றார்.
முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த சீசனில் இருந்து விலகிய ருதுராஜ் கெய்க்வாட் தற்போது இந்தியா A அணியில் இடம் பெற்றுள்ளார். இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 ஜூன் 20ஆம் தேதி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பு இந்திய ஏ அணி அங்கு சென்று சில போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த அணியில் இடம் பெற்றுள்ள துசார்தேஷ் பாண்டே, ருதுராஜ் கெய்க்வாட், எஸ்எஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரில், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இதன் மூலம் ருதுராஜ் கெய்க்வாட்டின் காயம் குணமடைந்துள்ளது தெரிய வருகிறது.
முன்பே காயம் குணமடைந்து இருந்தாலும் சென்னை அணிக்காக கடைசி சில லீக் போட்டிகளில் அவர் விளையாடவில்லை. காரணம் அவருக்கு பதிலாக ஆயுஸ் மாத்ரே அணியில் விளையாடி வருவதால் ருதுராஜ் கெய்க்வாட் விளையாட முடியாமல் போனது என்று கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ஆயுஸ் மாத்ரே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட முடியும். இதற்கு இடையில் சென்னை அணி நிர்வாகத்திற்கும் ருதுராஜ் கெய்க்வாட்க்கும் சில மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது, அதனால் தான் அவர் விளையாடவில்லை.. அடுத்த ஆண்டு வேறு அணிக்கு செல்கிறார் என்றெல்லம் வதந்திகள் பரவியது. இவை அனைத்தையும் தோனி உடைத்துள்ளார்.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு பேசிய தோனி, இந்த சீசனில் சில தவறுகள் நடந்துள்ளது என்றும், ஆனால் அடுத்த ஆண்டு ருதுராஜ் கெய்க்வாட் இதனை பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியது இல்லை என்றும் தெரிவித்து இருந்தார். இதன் மூலம் அடுத்த ஆண்டு சென்னை அணிக்காக ருதுராஜ் கெய்க்வாட் விளையாடுவதும், அவர் தான் கேப்டனாக இருக்க போகிறார் என்பதும் உறுதியாகி உள்ளது. தற்போது புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 வெற்றிகளுடன் பத்தாவது இடத்தில் உள்ளது. ஒரு சீசனில் பத்தாவது இடத்தை சென்னை அணி பிடிப்பது இதுவே முதல்முறை. அதே போல ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து இரண்டு முறை பிளே ஆப்க்கு தகுதி பெறாமல் இருப்பதும் இதுவே முதல்முறை.
மேலும் படிங்க: IPL Final: மும்பை இந்தியன்ஸ் இல்ல.. “ஆர்சிபி அணிக்கும்…” அடித்து சொல்லும் முன்னாள் சிஎஸ்கே வீரர்!