இந்தியாவில் லாவா போல்ட் என்1 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா மொபைல் நிறுவனம் லாவா போல்ட் என்1 மற்றும் போல்ட் என்1 புரோ என இரண்டு மாடல் போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.

அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா போல்ட் என்1 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இதை 4ஜி மாடலாக வெளியிட்டுள்ளது லாவா நிறுவனம். இந்த பட்ஜெட் விலையில் இரண்டு வண்ணங்களில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லாவா போல்ட் என்1: சிறப்பு அம்சங்கள்

  • 6.75 இன்ச் ஹெச்டி+ டிஸ்பிளே
  • ஆண்ட்ராய்டு 14 கோ எடிஷன்
  • Unisoc ஆக்டா-கோர் ப்ராசஸர்
  • 13 மெகாபிக்சல் கொண்ட கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது
  • 5 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
  • 4 ஜிபி ரேம்
  • 64 ஜிபி ஸ்டோரேஜ்
  • 5,000 mAh பேட்டரி
  • டைப்-சி யுஎஸ்பி போர்ட்
  • 10 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
  • ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்
  • ஃபேஸ் அன்லாக் அம்சம்
  • 4ஜி நெட்வொர்க்
  • ஜூன் 4-ம் தேதி முதல் இந்த போன் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும்
  • இந்த போனின் விலை ரூ.5,999 என அறிவிக்கப்பட்டுள்ளது
  • லாவா போல்ட் என்1 புரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,699 என தெரிவிக்கப்பட்டுள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.