இந்தியாவின் முக்கிய மதுபான உற்பத்தியாளரான ராடிகோ கைதான் (Radico Khaitan) ‘திரிகால்’ (Trikal) என்ற பெயரில் பிரிமியம் விஸ்கியை அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல் கசிந்தது. உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்த பிரிமியம் விஸ்கி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக முக்காலமும் அறிந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டனர். இந்து மதக் கடவுளான சிவபெருமானுடன் நெருக்கமாக தொடர்புடைய ‘திரிகால்’ என்ற பெயர், மதக் குழுக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களை பொங்கி எழச் செய்தது. தேவபூமி அல்லது “கடவுள்களின் நிலம்” என்று குறிப்பிடப்படும் உத்தரகண்ட் போன்ற […]
