RCB vs PBKS: நடப்பாண்டி ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுகள் இன்று முதல் தொடங்க உள்ளது. பிளே ஆஃப் சுற்றின் முதல் போட்டியான குவாலிஃபையர் 1ல் ரஜத் பட்டிதர் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
இப்போட்டியில் வெல்லும் அணி இறுதி போட்டிக்கு முன்னேறும், அதுவே தோற்கும் அணி எலிமினேட்டரில் வெற்றி அடையும் அணியுடன் மோத குவாலிஃபையர் 2க்கு செல்லும். எனவே இப்போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், ஆர்சிபி அணி இந்த அணி கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் இடையே நம்பிக்கை உள்ளதால், போட்டியின் மீது கூடுதல் எதிர்ப்பார்ப்புகள் உள்ளன.
மழை பெய்தால் என்ன ஆகும்?
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக இடையே சில நாட்கள் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால் மீண்டும் தொடங்கிய ஐபிஎல் போட்டிகள் புது அட்டவணையை கொண்டிருந்தது. அந்த அட்டவணை படி பிளே ஆஃப் சுற்றுகளில் குவாலிஃபையர் 1, எலிமினேட்டர் மற்றும் குவாலிஃபையர் 2 ஆகிய மூன்று சுற்றுகளுக்கும் ரிசர்வ் டே ஒதுக்கப்படவில்லை. இறுதி போட்டிக்கு மட்டுமே ரிசர்வே டே ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் தான், இன்றைய போட்டியில், மழை பெய்தால், என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று நடைபெறும் குவாலிஃபையர் 1 சுற்று முல்லான்பூரில் நடைபெற உள்ளது. இதுவரை அங்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எந்த அறிக்கையும் வெளியாக வில்லை. எனவே இன்றைய போட்டியில் மழை பெய்ய வாய்ப்பில்லை. அதையும் தாண்டி மழை பெய்து போட்டியை நடத்த முடியாமல் போனால், புள்ளிப் பட்டியலில் எந்த அணி முன்னிலையில் உள்ளதோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணி தான் முதல் இடத்தில் இருக்கிறது. ஒரு வேளை மழை பெய்து போட்டியை நடத்த முடியாமல் போனால், பஞ்சாப் அணி இறுதி போட்டிக்கு சென்றுவிடும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எலிமினேட்டரில் வெற்றி பெறும் அணியுடன் விளையாட வேண்டிய சூழல் ஏற்படும்.
இதேபோல், நாளை (மே 30) நடைபெற இருக்கும் எலிமினேட்டர் சுற்றில் மழை பெய்து போட்டியை நடத்த முடியாமல் போனால், குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். ஏனென்றால், குஜராத் அணி 3வது இடத்தில் உள்ளது. மும்பை அணி 4வது இடத்தில் உள்ளது. எனவே மூன்றாவது இடத்தில் இருக்கும் குஜராத் அணி இரண்டாவது தகுதிச்சுற்று அதாவது குவாலிஃபையர் 2க்கு முன்னேறும்.
மேலும் படிங்க: ஐபிஎல் 2026ல் சிஎஸ்கே தக்க வைத்துக் கொள்ளும் வீரர்கள்! இவர்கள் கழட்டி விடப்படுவார்கள்!
மேலும் படிங்க: ஐபிஎல் லீக் ஆட்டங்களில் சதம் அடித்த வீரர்களின் பட்டியல்!