Video: பாண்டியா உடன் மோதல்…? கில் செய்த 'அந்த' செயல் – ஷாக் சம்பவம்

IPL GT vs MI: ஐபிஎல் 2025 தொடரின் எலிமினேட்டர் போட்டியில் பரபரப்பாக நடைபெற்றது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

GT vs MI: ஆர்சிபி உடன் மோதப்போவது யார்?

இதன்மூலம் நாளை (ஜூன் 1) நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொள்ள இருக்கிறது. குவாலிபயர் 2 போட்டி மற்றும் இறுதிப் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. ஜூலை 3ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கு தற்போது ஆர்சிபி மட்டும் தகுதிபெற்றுள்ளது. நாளை நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் வெல்லும் அணியே ஆர்சிபியை இறுதிப்போட்டியில் எதிர்கொள்ளும்.

GT vs MI: கேப்டன்ஸியில் மிரட்டும் ஹர்திக் பாண்டியா

மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை ஹர்திக் பாண்டியா கடந்த வருடம் ரோஹித் சர்மாவிடம் இருந்து கேப்டன்ஸியை பெற்றார். கடும் விமர்சனங்களுக்கு ஆளான அவர் கடந்த 2024 சீசனில் மோசமான செயல்பாட்டை வெளிக்காட்டினார், மும்பை அணியும் 10வது இடத்தில் முடித்திருந்தது. இந்த முறையும் தொடக்கத்தில் சொதப்பலாக விளையாடினாலும் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து தற்போது குவாலிபயர் 2 வரை வந்துள்ளது.

ஹர்திக் பாண்டியா கேப்டன்ஸியை பொருத்தவரை குஜராத் டைட்டன்ஸ் அணியை முதன்முதலாக வழிநடத்தி 2022இல் கோப்பையை வென்று கொடுத்தார். 2023இல் சிஎஸ்கே அணியுடன் இறுதிப்போட்டியில் தோற்று 2வது இடத்தில் முடித்தார். 2024இல் மும்பைக்கு வந்தார், 10வது இடத்தில் MI நிறைவுசெய்தது. தற்போது குறைந்தபட்சம் 3வது இடம் உறுதி. இப்படி ஹர்திக் பாண்டியா வெற்றிகரமான கேப்டனாக வலம் வருகிறார். 

The ego clash betw pic.twitter.com/IlEdgDg3lY

— Bosminñæ (@bas_you_hi) May 30, 2025

GT vs MI: சுப்மன் கில் சுமாரான கேப்டன்ஸி

ஹர்திக் பாண்டியா கடந்தாண்டு குஜராத்தை விட்டு வந்த பின்னர் சுப்மான் கில் கேப்டன்ஸியை பெற்றார். கடந்த வருடம் பிளே ஆப் சுற்றுக்கு குஜராத் வராத நிலையில் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து சிறப்பாக விளையாடி வந்த கடைசி நேரத்தில் தோல்வியை தழுவி எலிமினேட்டரோடு வெளியேறியிருக்கிறது. கில் தற்போது இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் இருக்கிறார் என்ற சூழலில் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. தற்போது இந்த தோல்வி அவருக்கு மீண்டும் அழுத்தத்தை கொடுக்கலாம்.

GT vs MI: ஹர்திக் பாண்டியா vs சுப்மன் கில் மோதல்

இந்த சூழலில், நேற்றைய எலிமினேட்டர் போட்டிக்கு முன் நடந்த டாஸின்போது ஹர்திக் பாண்டியா உடன் சுப்மன் கில் கைக்கொடுக்க மறுத்தார் என கூறப்படுகிறது. டாஸை வென்ற பாண்டியா ரவி சாஸ்திரியிடம் உரையாட செல்வதற்கு முன், சுப்மான் கில்லிடம் கைக்குழுக்க முயன்றார். ஆனால், கில் கைக்குழுக்காமல் சென்றுவிட்டார். இது வீடியோவாகவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இருப்பினும் ஹர்திக் பாண்டியா பேசிவிட்டு அடுத்து கில் ரவி சாஸ்திரியிடம் உரையாட வந்தபோது, இருவரும் கைக்குழுக்கியது குறிப்பிடத்தக்கது. 

2] Hardik Pandya Angry Celebration After Shubman Gill Dismissal pic.twitter.com/waqiJh5S6R

— Harsh 17 (@harsh03443) May 30, 2025

மேலும், நேற்றைய போட்டி கடைசி ஓவர் வரை பரபரப்பாக சென்றது. வெற்றி பெறும் அணியே குவாலிபயர் 2 போட்டிக்கு செல்லும் என்பதால் கடுமையான மோதல் இருந்தது. குஜராத் தோல்வியடைய சுப்மன் கில் விரைவாக தனது விக்கெட்டை இழந்தது முக்கிய காரணம். போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே கில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அப்போது ஹர்திக் பாண்டியா மிகுந்த ஆக்ரோஷத்துடன் கொண்டாடினார். இதன்மூலம் ஹர்திக் பாண்டியா – சுப்மன் கில் இடையே மோதல் நிலவுவதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர், இதுகுறித்த சில வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.