முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே தளவாய்ப்பாளையம் வீரையன் நகரில் வசித்து வருபவர் எம்.ரங்கசாமி. அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான இவர் தற்போது அமமுக துணைப் பொதுச் செயலாளராக உள்ளார். 2011-2017 காலகட்டத்தில் இவர் எம்எல்ஏவாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.49 கோடி சொத்து சேர்த்ததாக ரங்கசாமி, மனைவி ஆர்.இந்திரா, மகன் வினோ பாரத் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், ரங்கசாமி வீட்டில் தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஆர்.அன்பரசன் தலைமையிலான … Read more

மகாராஷ்டிர நகரசபை அதிகாரி வீட்டிலிருந்து ரூ.31 கோடி ரொக்கம், நகைகள் பறிமுதல்

மும்பை: மகாராஷ்டிர நகரசபை நிர்வாக அதிகாரி வீட்டிலிருந்து ரூ.31 கோடி மதிப்புள்ள ரொக்கம், நகைகள், தங்கக்கட்டிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மகாராஷ்டிர மாநிலம் வாசை விரார் நகராட்சி அலுவலகத்தின் (விவிஎம்சி) துணை இயக்குநராக (நகரத்திட்டமிடல்) பணியாற்றுபவர் ஒய்.எஸ். ரெட்டி. இவர் மீது பல்வேறு புகார்கள் அமலாக்கத்துறைக்கு வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இவரது வீடு, அலுவலகங்கள், உறவினர் வீடுகளில் சோதனை நடத்தினர். மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் ரெட்டிக்கு சொந்தமான … Read more

இந்தியாவுக்கு பணம் அனுப்பினால் 5% வரி: ட்ரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி

அமெரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்க வகை செய்யும் புதிய மசோதாவை அதிபர் டொனால்டு ட்ரம்ப் அரசு வரையறுத்து உள்ளது. இதனால் அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக சுமார் 1.37 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் வசிப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. அவர்களை வெளியேற்ற அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிதீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் சட்டவிரோத குடியேறிகள் தொடர்ந்து … Read more

சேலம் மாவட்டம், காருவள்ளி , பிரசன்ன வெங்கட் ரமணர் ஆலயம்

சேலம் மாவட்டம், காருவள்ளி , பிரசன்ன வெங்கட் ரமணர் ஆலயம். திருவிழா: சித்ரா பவுர்ணமி, வைகாசி வசந்த உற்சவம், ஆனி திருமஞ்சனம், வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி, ராமநவமி. தல சிறப்பு: இத்தல பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொது தகவல்: இங்கு பெருமாள் நின்றகோலத்தில் அருள்பாலிக்கிறார். இவருக்கு நைவேத்யமாக சர்க்கரைப்பொங்கல் படைக்கின்றனர். பிரார்த்தனை: சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து வணங்கிட திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், ஐஸ்வர்யம், வேலை, பதவி உயர்வு கிடைக்கும், கல்வி சிறக்கும் என்பது … Read more

பாமக-வில் அன்புமணி கை ஓங்குகிறது: தைலாபுரத்தில் ராமதாஸ் ஏமாற்றம்

விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தை அன்புமணி ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமக மாவட்டத் தலைவர், செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் நேற்று நடைபெற்றது. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் கவுரவத் தலைவர் கோ.க.மணி எம்எல்ஏ, மாநிலப் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், சேலம் மேற்கு எம்எல்ஏ அருள், தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன், மாநில இளைஞரணித் தலைவர் முகுந்தன், புதுச்சேரி … Read more

‘ஜெகன் மோகன் ஆட்சியின் மதுபான ஊழல் டெல்லியை விட மிகப்பெரியது’ – ஆந்திர அமைச்சர் ரவீந்திரன்

அமராவதி: ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் மிகப்பெரிய அளவுக்கு மதுபான ஊழல் நடந்ததாக தெலுங்கு தேசம் கட்சி அமைச்சர் கொல்லு ரவீந்திரன் குற்றம் சாட்டினார். ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் ஒரு பெரிய மதுபான ஊழல் நடந்ததாக ஆந்திர கலால் துறை அமைச்சர் கொல்லு ரவீந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். அரசியல் மற்றும் நிதி ஆதாயத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மதுபான பிராண்டுகளுக்கு சாதகமாக செயல்பட தானியங்கி ஆர்டர் … Read more

ஹாங்காங், சிங்கப்பூரில் வேகமடையும் கரோனா புதிய அலை: சீனாவிலும் பரவுகிறது

ஆசிய நாடுகளில் கரோனா புதிய அலை பரவிவரும் நிலையில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2019-ல் சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் உலகெங்கும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த பாதிப்பு சீரடைய பல ஆண்டுகள் ஆனது. தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு அதனை அரசுகள் கட்டுப்படுத்தின. இந்நிலையில் ஆசிய நாடுகளில் தற்போது மீண்டும் கரோனா வைரஸ் பரவி வருகிறது. குறிப்பாக மக்கள்தொகை அடர்த்தி கொண்ட ஹாங்காங் மற்றும் … Read more

முதல்வர் ஸ்டாலின் மே 24-ல் டெல்லி பயணம்: நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதாக தகவல்

சென்னை: பிரதமர் மோடி தலைமையில் மே 24-ம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக பிரதமர் உள்ளார். நிதி ஆயோக் சார்பில் பொதுவாக ஆண்டுக்கு ஒருமுறை நிர்வாக குழு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பிரதமர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், நாட்டின் அனைத்து … Read more

“பாகிஸ்தானுக்கு உதவி செய்வதை சர்வதேச நாணய நிதியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” – ராஜ்நாத் சிங்

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் எந்தவொரு நிதி உதவியும் பயங்கரவாதம் வளர துணை போகும் என்பதால், அந்நாட்டுக்கு உதவி செய்வதை சர்வதேச நாணய நிதியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவத்தால் குறிவைக்கப்பட்ட ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளில் ஒன்றான குஜராத்தின் பூஜ் விமானப்படை தளத்துக்குச் சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர், “ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை. இது வெறும் … Read more

போலாரி தளத்​தில் பாகிஸ்தான் கண்காணிப்பு விமானம் அழிக்கப்பட்டது: முன்னாள் ஏர் மார்ஷல் ஒப்புதல்

புதுடெல்லி: ​பாகிஸ்​தானுக்கு எதி​ராக இந்​தியா மேற்​கொண்ட ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின்​போது போலாரி தளத்​தில் நிறுத்​தப்​பட்​டிருந்த கண்​காணிப்பு விமானம் அழிக்​கப்​பட்​டதை பாகிஸ்​தானின் முன்​னாள் ஏர் மார்​ஷல் மசூத் அக்​தர் உறு​திப்​படுத்​தி​யுள்​ளார். பஹல்​காமில் தீவிர​வா​தி​கள் நடத்திய தாக்​குதலில் 26 பேர் உயி​ரிழந்​தனர். இந்த சம்​பவத்​தின் பின்​னணி​யில் பாகிஸ்​தான் இருப்​பது தெரிய​வந்​ததையடுத்து அந்த நாட்​டின் மீது ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கையை இந்​தியா தொடங்​கியது. அதன் பின்​னர் புரிந்​துணர்வு அடிப்​படை​யில் இந்​தி​யா-​பாகிஸ்​தான் போர் நிறுத்​தப்​பட்​டது. ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின்​போது எந்​த​வித பாதிப்​பும் இல்லை … Read more