ஊட்டியில் இன்று 127-வது மலர் கண்காட்சி தொடக்கம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புகழ்பெற்ற 127-வது மலர்க் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார். நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது. கோத்தகிரியில் காய்கறிக் கண்காட்சியுடன் கடந்த 3-ம் தேதி கோடை விழா தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127-வது மலர்க் கண்காட்சி இன்று முதல் வரும் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மலர்க் கண்காட்சியை … Read more

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் உயிரிழப்பு; 9 பேர் கைது

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக 9 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அமிர்தசரஸ் மாவட்டம் அமிர்தசரஸ் அருகே மஜிதியா பகுதியில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த கள்ளச்சாராயத்தை பங்கலி, படல்புரி, மராரி கலான், தெரேவால் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பலர் குடித்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்த சிறிது நேரத்தில் பலர் சுருண்டு விழுந்து இறந்தனர். மொத்தம் 17 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர். மேலும், கள்ளச்சாராயம் … Read more

இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத தாக்குதல் இனியும் நடந்தால் உலக வரைபடத்தில் பாகிஸ்தான் இருக்காது: நயினார் நாகேந்திரன்

சென்னை: தீவிரவாத தாக்குதல் இனியும் நடந்தால் உலக வரைபடத்தில் பாகிஸ்தானை மோடி இல்லாமல் ஆக்கிவிடுவார் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் வெற்றி கண்ட வீரர்களுக்கும், வெற்றிக்கு வித்திட்ட பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழக பாஜக சார்பில் ‘மூவர்ண கொடி பேரணி’ சென்னை புதுப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இந்த பேரணிக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில தலைவர் தமிழிசை, தேசிய … Read more

பாகிஸ்தான் தூதரக அதிகாரி 24 மணி நேரத்தில் வெளியேற கெடு

புதுடெல்லி: ​பாகிஸ்​தான் நாட்டு தூதரக அதி​காரி ஒரு​வரை அடுத்த 24 மணி நேரத்​துக்​குள் நாட்டை விட்டு வெளி​யேறு​மாறு மத்​திய அரசு கெடு விதித்​துள்​ளது. ஜம்​மு-​காஷ்மீரின் பஹல்​காமில் தீவிர​வா​தி​கள் தாக்​குதல் நடத்​தி​ய​தில் 26 அப்​பாவி இந்​தி​யர்​கள் உயி​ரிழந்​தனர். இதையடுத்து ஆபரேஷன் சிந்​தூர் என்ற பெயரில் இந்​திய ராணுவப் படைகள் பாகிஸ்​தான் தீவிர​வாத முகாம்​கள் மீது தாக்​குதல் நடத்​தின. இதைத் தொடர்ந்து இந்​தியா மீது பல இடங்​களில் பாகிஸ்​தான் ராணுவம் தாக்​குதலை நடத்​தி​யது. இதற்​குப் பதிலடி தரும்​வித​மாக இந்​திய பாது​காப்​புப் … Read more

பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்க அரசுக்கு அதிகாரம் வழங்கும் சட்டங்களை எதிர்த்து வழக்கு

சென்னை: தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டங்களை எதிர்த்து பாஜக வழக்கறிஞர் தொடர்ந்துள்ள வழக்கில் மத்திய, மாநில அரசுகள் ஒரு வாரத்தில் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது, பல்கலைக்கழகங்களின் வேந்தராக தமிழக முதல்வரை நியமிப்பது என்பது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய 10 மசோதாக்கள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் … Read more

சேதமடைந்த பாக். விமானதள கட்டிடம், ஓடு பாதை படங்கள் வெளியீடு

புதுடெல்லி: பாகிஸ்தான் விமான தளங்களை குறிவைத்து இந்திய விமானப்படை கடந்த 10 மற்றும் 11-ம் தேதி நடத்திய தாக்குதலில் சேதமடைந்த கட்டிடங்கள் மற்றும் ஓடுதளங்களின் செயற்கைக்கோள் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்திய நகரங்கள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. இதற்கு பதிலடியாக இந்திய விமானப்படை கடந்த 10 மற்றும் 11-ம் தேதிகளில் பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமான தளம், சிந்து பகுதியில் உள்ள … Read more

இந்தியா – பாக். போரை நிறுத்தியது அமெரிக்கா; இரு நாட்டு vதலைவர்களும் விருந்துக்கு செல்லலாம் – ட்ரம்ப்

ரியாத்: ‘‘இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்கா மத்தியஸ்தராக செயல்பட்டது’’ என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து தம்பட்டம் அடித்து வருகிறார். ஆனால், அவர் கூறுவதை எல்லாம் இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சவுதி அரேபியா சென்றார். அங்கு சவுதி – அமெரிக்க முதலீடு கூட்டமைப்பில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: சில நாட்களுக்கு முன் எனது நிர்வாகம், இந்தியா … Read more

மதுரை ஆதீனத்துக்கு இஸ்லாமியர்கள் துணை நிற்பர்: வேலூர் இப்ராஹிம் தகவல்

மதுரை: மதுரை ஆதீனத்துக்கு இஸ்லாமியர்கள் துணை நிற்பார்கள் என பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் கூறினார். சென்னையில் நடைபெற்ற சனாதன மாநாட்டில் பங்கேற்க மதுரை ஆதீனம் காரில் சென்று கொண்டிருந்த போது கள்ளக்குறிச்சியில் அவர் கார் மீது இன்னொரு கார் உரசியது. இதையடுத்து மற்றொரு காரில் இருந்த இஸ்லாம் மத அடையாளத்தில் இருந்த இருவர் காரை மோதவிட்டு தன்னை கொலை செய்ய முயன்றதாக நடைபெற்றதாக மதுரை ஆதீனம் குற்றம்சாட்டினார். இந்நிலையில் மதுரை ஆதீனத்தை … Read more