கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது என்று நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் கூறியதற்கு கர்நாடக உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தது. “மன்னிப்பு கேட்டிருந்தால் நிலைமை சரியாகியிருக்கும்” என்று அது கூறியது. கமல்ஹாசன் நடித்த ‘தக் லைஃப்’ திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதற்கும் திரையிடுவதற்கும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்’, படத்தின் விநியோகம் மற்றும் வெளியீட்டிற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிடக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகியது. […]
