Samsung Galaxy A55 5G At Discount Price: நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்க விரும்புகிறீர்கள் என்றால், இந்த நேரத்தில் சாம்சங் ஸ்மார்ட்போனை வாங்கலாம். ஏனெனில் இங்கே குறிப்பிடப்படப்பட்டுள்ள சாம்சங் ஸ்மார்ட்போனில் ரூ.14,000 வரை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் பல சிறந்த அம்சங்களும் காணப்படுகின்றன.
இந்த ஸ்மார்ட்போன் சாம்சங்கின் கேலக்ஸி a55 5G (Samsung galaxy a55 5G) ஆகும். இந்த ஸ்மார்ட்போனை ரூ.14,000 தள்ளுபடியுடன் மலிவு விலையில் வாங்கலாம். 8GB RAM மற்றும் 128GB வகை கொண்ட Samsung galaxy a55 5G ஸ்மார்ட்ஃபோன் இ-காமர்ஸ் தளமான Amazon இல் ரூ.25,999க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்ஃபோன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது அந்த நேரத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.39,999 ஆக இருந்தது. அதாவது, தற்போது விலையுடன் ஒப்பிடும்போது, இந்த ஸ்மார்ட்போனில் ரூ.14,000 வரை சரிவு ஏற்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இது தவிர, உங்களிடம் ICICI வங்கி கிரெடிட் கார்டு இருந்தால், அதன் மூலம் பணத்தை செலுத்தினால், கூடுதலாக 5 சதவீத வரை தள்ளுபடியைப் பெறலாம். அதுமட்டுமின்றி உங்களிடம் இருக்கும் பழைய தொலைபேசியை எக்ஸ்சேஞ்ச் செய்து மாற்றும்போது, அதிகபட்சமாக ரூ.24,200 வரை தள்ளுபடி பெறலாம். இருப்பினும், பழைய தொலைபேசியின் இறுதி விலை அதன் பிராண்ட் மற்றும் நிலையைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படும்.
Samsung Galaxy A55 5G அம்சங்கள்
Samsung Galaxy A55 5G ஸ்மார்ட்ஃபோன் ஆனது 6.6-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதன் புதுப்பிப்பு வீதம் 120Hz வரை உள்ளது. இந்த போன் 161.1 x 77.4 x 8.2mm அளவு மற்றும் சுமார் 213 கிராம் எடையை கொண்டது.
இந்த ஸ்மார்ட்போனின் கேமராவைப் பற்றிப் பேசுகையில், இந்த ஸ்மார்ட்போனில் நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. 12MP அல்ட்ரா-வைட் கேமரா, ஆட்டோஃபோகஸ் (AF) மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50MP பிரதான கேமரா, 5MP மேக்ரோ கேமராக்கள் ஆகும். நல்ல செல்ஃபி எடுப்பதற்கான 32MP முன் கேமராவும் இதில் கொடுப்படுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போனில் பல சேமிப்பு விருப்பங்கள் உள்ளன. 8GB அல்லது 12GB RAM உடன் 128GB அல்லது 256GB சேமிப்பகம் கொண்ட போனை நீங்கள் தேர்வு செய்யலாம்.
இந்த ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த 5,000mAh பேட்டரியும் உள்ளது. இது Android 14 இயக்க முறைமை மற்றும் One UI 6.1 உடன் வருகிறது. உங்கள் தரவைப் பாதுகாக்க Samsung Knox பாதுகாப்பும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.