2025 டிவிஎஸ் ஜூபிடர் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள் – TVS Jupiter 125 on-Road price and Specs


2025 tvs jupiter ivory grey

பிரசத்தி பெற்ற டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஜூபிடர் 125 ஸ்கூட்டர் மாடலின் 2025 ஆம் ஆண்டிற்கான மாடல் என்ஜின், மைலேஜ், நிறங்கள், வசதிகள், போட்டியாளர்கள் மற்றும் ஆன்-ரோடு விலை என அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

2025 TVS Jupiter 125

125cc சந்தையில் உள்ள போட்டியாளர்களை விட கூடுதலான பூட் ஸ்பேஸ் பெற்றதாகவும், சிறப்பான டிசைனை பெற்றுள்ள ஜூபிடர் 125 மாடலில் 124.8cc ஒற்றை சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 6,500rpm-ல் 8.04bhp பவர், 8.44hp (with assist) மற்றும் 11.1Nm @ 5000rpm (with Assist) 10.5 Nm @ 5000rpm (without Assist) டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. குறிப்பாக iGO Assist நுட்பத்தை பெற்றிருப்பதனால் சிறப்பான முறையில் எரிபொருள் சிக்கனத்தை கொண்டுள்ளது.

மைக்ரோ ஹைபிரிட் டெக்னாலஜி மூலம் பவர்ஃபுல்லான பேட்டரி கொடுக்கப்பட்டு இண்டெகரேட்டட் ஸ்டார்டிங் ஜெனரேட்டர் ஆனது இணைக்கப்பட்டிருக்கின்றது.

டிரம் அலாய், டிஸ்க், DT SXC, மற்றும் Smartxonnect என நான்கு விதமான வேரியண்டடை பெற்றுள்ள ஜூபிடர் 125ல் ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் வசதி மூலம் டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெறும் ஜூபிடர் புளூடூத் வாயிலாக இயக்கப்பட்ட தொழில்நுட்பமாகும். இது TVS Connect மொபைல் செயலி வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைக்கிறது.

டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், குரல் உதவி, எஸ்எம்எஸ் மற்றும் அழைப்பு எச்சரிக்கைகள். மேலும், டிவிஎஸ் USB மொபைல் சார்ஜிங் போர்ட் பொருத்தியுள்ளது.

130மிமீ டிரம் அல்லது 220 மிமீ டிஸ்க் பெற்ற ஒரு சில வேரியண்டுகள் உட்பட பின்புறத்தில் பொதுவாக 130 மிமீ டிரம் வழங்கப்பட்டு (SBT) கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் ஆனது கொடுக்கப்பட்டுள்ளது.

5.1 லிட்டர் பெட்ரோல் டேங்க் உடன் 33 லிட்டர் ஸ்டோரேஜ் பெற்ற டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் பரிமாணங்கள் 1,852 மிமீ நீளம், 691 மிமீ அகலம் மற்றும் 1,168 mm உயரம் பெற்று, 1,275 மிமீ வீல்பேஸ் கொண்டதாக உள்ளது. 163 மிமீ வீல்பேஸ் மற்றும் 108 முதல் 109 கிலோ வரை எடை வேரியண்டை பொறுத்து மாறுபடுகின்றது. டீயூப்லெஸ் டயர் கொண்டுள்ள ஸ்கூட்டரில் இரண்டு பக்கமும் 90/90-12 54J டயர் உள்ளது.

  • Drum ₹ 90,896
  • Disc ₹ 95,996
  • DT SXC ₹ 97,516
  • SmartXonnect ₹ 99,985

(எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு)

jupiter 125 on-Road Pricejupiter 125 on-Road Price

2025 TVS Jupiter 125 on-Road Price Tamil Nadu

டிவிஎஸ் மோட்டாரின் ஜூபிடர் 125 ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் மற்ற மாவட்டங்களுக்கும் புதுச்சேரி மாநிலத்துக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

  • Drum ₹ 1,09,328
  • Disc ₹ 1,16,043
  • DT SXC ₹ 1,16,742
  • SmartXonnect ₹ 1,20,498

(All Price On-road Tamil Nadu)

  • Drum ₹ 1,01,148
  • Disc ₹ 1,07,564
  • DT SXC ₹ 1,09,355
  • SmartXonnect ₹ 1,12,986

(All Price on-road Pondicherry)

டிவிஎஸ் ஜூபிடர் 125 நுட்பவிரங்கள்

என்ஜின்
வகை ஏர் கூல்டு, 4 stroke
Bore & Stroke 53.5 x 55.5 mm
Displacement (cc) 124.8 cc
Compression ratio 10.0:1
அதிகபட்ச பவர் 8.04 hp (6.0 Kw) at 6,500 rpm

8.44 hp (6.30 Kw) at 6,500 rpm

அதிகபட்ச டார்க் 9.8Nm @ 4500rpm (with Assist)

10.5Nm @ 4500rpm (without Assist)

எரிபொருள் அமைப்பு Fuel injection (FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் அண்டர் போன்
டிரான்ஸ்மிஷன் ஆட்டோமேட்டிக்
கிளட்ச் டிரை டைப்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக்
பின்பக்கம் அட்ஜெஸ்டபிள் காயில் ஸ்பிரிங்
பிரேக்
முன்புறம் டிரம் 130 mm/220mm டிஸ்க்
பின்புறம் டிரம் 130 mm (with SBT)
வீல் & டயர்
சக்கர வகை அலாய்/SMW
முன்புற டயர்  90/90-12 54J ட்யூப்லெஸ்
பின்புற டயர் 90/90-12 54J ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி 12V-4Ah MF பேட்டரி
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப்/கிக்
பரிமாணங்கள்
நீளம் 1852 mm
அகலம் 691 mm
உயரம் 1168 mm
வீல்பேஸ் 1275 mm
இருக்கை உயரம் 765 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 163 mm
எரிபொருள் கொள்ளளவு 5.1 litres
எடை (Kerb) 108 kg (Drum) – 109 kg (Disc)

டிவிஎஸ் ஜூபிடர் 125 நிறங்கள்

ஜூபிடர் 125ல் ஐவரி பிரவுன், ஐவரி கிரே, வெள்ளை, நீலம், ஆரஞ்சு, கிரே, சிவப்பு, ஸ்டார்லைட் ப்ளூ, மற்றும் காப்பர் பிரான்ஸ் என 10 நிறங்கள் உள்ளன.

2025 TVS Jupiter 125 rivals

ஜூபிடர் 125 மாடலுக்கு போட்டியாக சந்தையில் ஆக்சஸ் 125, ஆக்டிவா 125, யமஹா ஃபேசினோ, ஹீரோ டெஸ்டினி 125, உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளுகின்றது.

Faqs About TVS Jupiter 125

டிவிஎஸ் ஜூபிடர் 125 என்ஜின் விபரம் ?

124.8cc ஒற்றை சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 6,500rpm-ல் 8.04bhp பவர், 8.44hp (with assist) மற்றும் 11.1Nm @ 5000rpm (with Assist) 10.5 Nm @ 5000rpm (without Assist) டார்க் வெளிப்படுத்துகின்றது.

டிவிஎஸ் ஜூபிடர் 125 மைலேஜ் எவ்வளவு ?

டிவிஎஸ் ஜூபிடர் 125 மைலேஜ் லிட்டருக்கு 45-48 கிமீ வரை வழங்கும்.

2024 TVS Jupiter 125 ஆன்-ரோடு விலை எவ்வளவு ?

டிவிஎஸ் ஜூபிடர் 125 ஆன்-ரோடு விலை ரூ.1.10 லட்சம் முதல் ரூ.1.21 லட்சம் வரை ஆகும்.

Related Motor News

டிவிஎஸ் ஜூபிடர் 125 போட்டியாளர்கள் ?

ஆக்சஸ் 125, ஆக்டிவா 125, யமஹா ஃபேசினோ, ஹீரோ டெஸ்டினி 125 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.