TTV: "2026-ல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான் அமையும்" – அடித்துச் சொல்லும் டிடிவி தினகரன்

‘2026 ஆம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமையப்போவது உறுதி. அது கூட்டணி ஆட்சியாகவும், கூட்டணி அமைச்சரவையாகவும்தான் இருக்கும்’ என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் பேசியிருக்கிறார்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று(ஜூன் 10) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டிவிவி தினகரன், “2026 ஆம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமையப்போவது உறுதி.

அது கூட்டணி ஆட்சியாகவும், கூட்டணி அமைச்சரவையாகவும்தான் இருக்கும். அதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள வெற்றி பெற்ற கட்சிகள் அனைத்தும் இருக்கும். மேலும், அதிமுக அழைத்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவிற்காகவும் பிரசாரம் செய்வேன்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

எடப்பாடி 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வாரா என்று எனக்குத் தெரியாது. ஆனால், நான் 234 தொகுதிகளிலும் கூட்டணி வேட்பாளர்களுக்குப் பிரசாரம் செய்வேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.