கடைசியாக 2008ல் தான்… ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 282 இலக்கை சேஸ் செய்யுமா தென்னாப்பிரிக்கா?

பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணியும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் விளையாடி வருகிறது. இப்போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தின் ஜூன் 11ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டு இன்னிங்ஸ் பேட்டிங்கை செய்து முடித்துள்ள ஆஸ்திரேலியா அணி 282 ரன்கள் இலக்கை தென்னாப்பிரிக்கா அணிக்கு நிர்ணயித்துள்ளது. 

முதல் இன்னிங்ஸில் 138 ரன்களில் ஆல் அவுட் ஆன தென்னாப்பிரிக்கா அணி, தற்போது 282 என்ற டார்க்கெட்டை சேஸ் செய்யுமா என்ற கேள்வி எழும்பி உள்ளது. தென்னாப்பிரிக்கா அணி தனது டெஸ்ட் வரலாற்றில் இதுவரை 5 முறை மட்டுமே 250க்கும் அதிகமான இலக்கை சேஸ் செய்து வெற்றி பெற்றுள்ளது. அதில் மூன்று முறை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 250க்கும் அதிகமான ரன்களை தென்னாப்பிரிக்கா அணி சேஸ் செய்து வெற்றி பெற்றுள்ளது. 

அதேசமயம் தற்போது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டி நடைபெற்று வரும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 200க்கு அதிகமான இலக்கை சேஸ் செய்வது என்பதே மிகவும் கடினமான ஒரு விஷயம் ஆகும். லண்டன் லார்ட்ஸில் இதுவரை 135 சர்வதேச டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று இருக்கின்றன. அதில் வெறும் 4 முறை மட்டுமே 200க்கும் அதிகமான டார்கெட் எட்டப்பட்டுள்ளது. 

அப்படி, தென்னாப்பிரிக்கா அணி இந்த 282 ரன்கள் என்ற டார்கெட்டை எட்டுவது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். ஒருவேளை தென்னாப்பிரிக்கா அணி 282 ரன்களை எட்டி வெற்றி பெற்றால், வரலாற்றில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாக தென்னாப்பிரிக்காவுக்கு இது அமையும். மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 250க்கும் மேற்பட்ட இலக்கை கடைசியாக 2008ல் தான் சேஸ் செய்துள்ளது. இது ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் அரங்கேறியது. அப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 414 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்களை அடித்தது. அதையடுத்து தென்னாப்பிரிக்கா அணி 138 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், 74 ரன்கள் லீடுடன் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. பின்னர் 207 ரன்கள் எடுத்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணி 282 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் மிட்செல் ஸ்டார்க் 58 ரன்களையும் அலக்ஸ் கேரி 43 ரன்களையும் எடுத்தனர். 

மேலும் படிங்க: உலக கிரிக்கெட்டை வியப்பில் ஆழ்த்திய தமிழக வேகப்பந்து வீச்சாளர்.. மணிக்கு 147.3 கிமீ வேகம்

மேலும் படிங்க: சுத்தமா பிடிக்கல.. ரிஷப் பண்ட்டை கடுமையாக சாடிய செளரவ் கங்குலி!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.