மேஷம் லாபத்தை, வருமானத்தை திட்டமிட்டு சேமிப்பதோ அல்லது சுபச் செலவுகளாக மாற்றுவதோ அவசியம். குழந்தைங்க விஷயத்தில எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துகளில் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தால் அவை சரியாக ஆரம்பிக்கும். வேலை மாறுவது புதிய இடத்திற்கு செல்வது ஆகியவை உங்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி இல்லைன்னா டென்ஷன் ஆகாதீங்க. நடப்பது நன்மைக்குத்தான்னு புரிஞ்சுக்குங்க. பேச்சுல இனிமை அவசியம். ஆரோக்கியக் குறைபாடு நீங்கும். வியாபாரம் லாபகரமாக நடக்கும். தொழிலை விரிவுபடுத்துவது பற்றிய ஆலோசனை மேற்கொள்வீங்க. அனுபவப்பூர்வமான அறிவுத் திறன் […]
