Ind vs Eng 1st Test: சாய் சுதர்சன் டக் அவுட்.. அறிமுக போட்டியிலேயே இப்படி ஒரு சோதனையா?

இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி இன்று(ஜூன் 20) லீட்ஸ்ஸின் ஹெடிங்லி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி உள்ளது. ரோகித் சர்மா, விராட் கோலி இல்லாத முதல் டெஸ்ட் தொடர் என்பதால், மிகுந்த எதிர்ப்பார்ப்பு உள்ளது.

மதியம் 3 மணிக்கு டாஸ் வீசப்பட்டது. டாஸை இங்கிலாந்தின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. 3.30 மணிக்கு தொடங்கிய நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 

இருவருமே நிதானமாக ஆடி வந்தனர். இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர்களால் இவர்களை அவுட் செய்ய முடியவில்லை. பந்துகளை பவுண்டரிகளுக்கு அனுப்பினர். 5.30 மணிக்கு முதல் செஷன் முடிவதற்கு சற்று முன்னால் தான் கே. எல். ராகுல் ஆட்டமிழந்தார். அவரை பிரைடன் கார்ஸ் அவுட் ஆக்கினார். ராகுல் 78 பந்துகளை எதிர்கொண்ட நிலையில், 42 ரன்கள் எடுத்து வெளியேறினார். 

ஆரஞ்ச் கேப் வீரருக்கு வந்த சோதனை 

கே.எல். ராகுல் ஆட்டமிழந்த நிலையில், சாய் சுதர்சன் களம் இறங்கினார். இவர் மீது எக்கச்சக்க எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில், டக் ஆவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அவரை இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வீழ்த்தினார். சாய் சுதர்சனுக்கு இது அறிமுக போட்டியாகும். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சாய் சுதர்சன் தான் அதிக ரன்கள் அடித்து ஆரஞ்ச் கேப்பை பெற்றார். இந்த நிலையில், அவர் அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே டக் அவுட் ஆனது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தை அளித்தது. 

இராண்டாவது செஷன் 

போட்டியின் இரண்டாவது செஷன் 6.30 மணிக்கு தொடங்கும். சாய் சுதர்சன் ஆட்டமிழந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி தற்போது 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்களை அடித்துள்ளது. அடுத்ததாக சேரப்போகும் கூட்டணி இந்தியாவை வலுவான நிலைக்கு கொண்டு செல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

மேலும் படிங்க: விராட் கோலியின் முன்னாள் காதலிகள்.. ரோகித் மனைவியுமா? லிஸ்ட் ரொம்ப பெருசு!

மேலும் படிங்க: ஐபிஎல் 2025: தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உலகில் மாபெரும் சாதனை!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.