டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்ற 2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 அறிமுகமானது


2025 TVS Apache RTR 160

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரபலமான அப்பாச்சி RTR 160 2V மாடலில் கூடுதலாக டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் OBD-2B எஞ்சின் ஆதரவுடன் சிவப்பு நிற அலாய் வீல் பெற்று ரூ.1,34,320 எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்கின் ஸ்போர்ட்ஸ் மோட் 8,750 rpm-ல் 16.04 PS மற்றும் 7,000 rpm-ல் 13.85 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் Urban/ Rain மோட் 13.32 PS பவர் 8000 rpm-லும், 12.7 Nm டார்க் ஆனது 6500 rpm-ல் வெளிப்படுத்துகின்ற நிலையில் 5 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

எல்சிடி கிளஸ்ட்டருடன் புளூடூத் மற்றும் வாய்ஸ் அசிஸ்டுடன் கூடிய SmartXonnect ஆதரவுடன் மேட் பிளாக் மற்றும் பேர்ல் ஒயிட் போன்ற வண்ணங்களில் சிவப்பு நிற அலாய் வீல் கொண்டதாக அமைந்துள்ளது.

சஸ்பென்ஷன் அமைப்பில் தொடர்ந்து டெலஸ்கோபிக் முன் ஃபோர்க்குகள் மற்றும் கேஸ்-சார்ஜ் செய்யப்பட்ட பின்புற ஷாக் அப்சார்பர் பெற்றதாகவும், 12 லிட்டர் எரிபொருள் டேங்க் கொண்டுள்ளது.

டிரம், டிஸ்க் என இரு விதமான பிரேக்கிங் அமைப்பினை கொண்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றுள்ள பைக்கில் முன்புறத்தில் டிஸ்க், பின்புறத்திலும் டிஸ்க் பெற்றதாக அமைந்துள்ளது. முந்தைய ரேசிங் எடிசன் மாடலை விட கூடுதலாக ரூ.4,000 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.