நகை திருட்டு விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி உயிரிழப்பு: தலைவர்கள் கண்டனம்

மடப்புரத்தில் உள்ள கோயில் காவலாளி உயிரிழந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன்: காவல் துறையை கட்​டுப்​பாட்​டில் வைத்​திருக்க வேண்​டிய முதல்​வர் கண்​டும் காணா​மல் இருப்​ப​தால் அப்​பாவி மக்​கள் உயி​ரிழக்​கின்​றனர். மடப்​புரம் சம்​பவத்​துக்கு முதல்​வர் என்ன சொல்​லப் போகிறார்?

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி: ஒரு​வர் தவறு செய்​த​தாக காவல் துறை கரு​தி​னால், கைது செய்து நீதி​மன்​றத்​தில் ஒப்​படைத்​து, உரிய சட்ட நெறி​முறையைப் பின்​பற்ற வேண்​டும். சட்​டத்தை கைகளில் எடுத்​துக்​கொள்​ளக் கூடாது. தனது நேரடிக் கட்​டுப்​பாட்​டில் உள்ள காவல் துறையைக்​கூட நிர்​வகிக்​கத் தெரி​யாத முதல்​வருக்கு கடும் கண்​டனம் தெரி​வித்​துக் கொள்​கிறேன். மாவட்ட நீதிபதி தலை​மையி​லான குழு விசா​ரணை நடத்​தி, உயி​ரிழப்​புக்​குக் காரண​மானவர்​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும். இறந்​தவர் குடும்​பத்​துக்கு இழப்​பீடு வழங்க வேண்​டும்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: திமுக ஆட்​சி​யில் காவல் நிலை​யத்​துக்கு வரு​வோரின் உயிர்​களுக்​கு பாது​காப்பு இல்​லாத நிலை உரு​வாகி​யுள்​ளது. காவல் துறை​யின் அராஜக போக்​குக்கு முற்​றுப்​புள்ளி வைக்க வேண்​டும்.

பாமக தலை​வர் அன்​புமணி ராம​தாஸ்: சாத்​தான்​குளம் படு​கொலை​போல, மடப்​புரம் சம்​பவம் நிகழ்ந்​துள்​ளது. இதற்​காக காவல் துறை​யும், முதல்​வரும் தலைகுனிய வேண்​டும். இச்​சம்​பவத்​துக்கு பொறுப்​பேற்று முதல்​வர் பதவி விலக வேண்​டும்.

தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை: பாலியல் குற்​றங்​களில் ஈடு​படும், போதைப் பொருட்​கள் விற்​பனை செய்​யும் திமுக​வினர் யாரும் காவல் துறை​யால் தாக்​கப்​படு​வ​தில்​லை. சிறிய குற்​றங்​களில் விசா​ரணைக்கு அழைத்​துச் செல்​லப்​படும் அப்​பாவி​களைக் காவல் துறை கடுமை​யாகத் தாக்​கு​வது அதி​கரித்​துள்​ளது. 2022-ம் ஆண்​டிலிருந்து 23 பேர் காவல் துறை விசா​ரணை​யின்​போது உயி​ரிழந்​துள்​ளனர். ஆனால், முதல்​வர் எந்​தக் கவலை​யுமின்றி இருக்​கிறார்.

இதே​போல, அமமுக பொதுச்செய​லா​ளர் டிடி​வி.​தினகரன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, நாதக தலைமை ஒருங்கிணைப்​பாளர் சீமான், தவெக பொதுச் செய​லா​ளர் என்​.ஆனந்த் உள்​ளிட்​டோரும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.