சட்டம் ஒழுங்கை பாதுகாத்து நீதியை நிலைநாட்டுங்கள்: காவல் உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

சென்னை: ​காவல் துறை​யினர் முழு​மை​யாக செயல்பட சுதந்​திரம் அளிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில் சட்​டம் ஒழுங்கை பேணிப்பாதுகாத்​து, நீதியை நிலை​நாட்ட வேண்​டும் என்​றும் முக்​கியப் பிரச்​சினை​களில் காவல்​துறை உயர் அலு​வலர்​கள் ஊடகங்​களுக்கு தெளி​வாக விளக்​கமளித்து வதந்​தி​கள் பரவுவதை தடுக்க வேண்​டும் என்​றும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறிவுறுத்தி​யுள்​ளார்.

சென்னை தலை​மைச்​செயல​கத்​தில், முதல்​வர் தலை​மை​யில் சட்​டம்- ஒழுங்கு நிலை குறித்த ஆய்​வுக்​கூட்​டம் நேற்று நடை​பெற்றது. இதில் தலை​மைச் செயலர், டிஜிபி உள்​ளிட்ட காவல்​துறை உயர் அலு​வலர்​களு​டன் ஆலோ​சித்​தார். அப்​போது மண்டல காவல்​துறை ஐஜி-க்​கள் தங்​கள் மண்​டலங்​களில் குற்​றத்​தடுப்பு தொடர்​பாக மேற்​கொள்​ளப்​பட்ட முயற்​சிகள் குறித்து விளக்​கினர்.

கூட்​டத்​தில் முதல்​வர் பேசி​ய​தாவது: மாநிலத்​தில் சட்​டம் ஒழுங்​கு, பொது அமை​தியை அரசு கவன​மாக கையாண்டு வரு​கிறது. அரசு எடுத்த நடவடிக்​கைகள் மூலம் தமிழகத்​தின் தொழில் வளர்ச்​சி, தொழில் முதலீடு, புதிய தொழிற்​சாலைகள், புதிய வேலை​வாய்ப்​பு​கள் அதி​கரித்​துள்​ளன. தமிழகம் அமை​தி​யான மாநில​மாக திகழ காவல்​துறை​யின் பங்​களிப்பு முக்​கிய​மான​தாக விளங்கு​கிறது.

மேலும், காவல் நிலை​யங்​களுக்​குப் புகார் கொடுக்க வரும் அனைத்து பொது​மக்​களிட​மும் கண்​ணி​யத்​தோடு நடந்து கொண்​டு, புகார்​கள் மீது குறிப்​பிட்ட காலத்​துக்​குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும். போதைப் பொருள் நடமாட்​டத்தை கட்​டுப்​படுத்த தீவிரம் காட்ட வேண்​டும்.

சட்​டம்- ஒழுங்கு தொடர்​பான முக்​கியப் பிரச்​சினை​கள் ஏற்​படும்​போது காவல்​துறை உயர் அலு​வலர்​கள் உடனடி​யாக ஊடகங்​களுக்கு அப்​பிரச்​சினை குறித்து தெளி​வாக விளக்​கமளித்​து, வதந்தி பரவுவதை தடுக்க வேண்​டும். சாதி, சமய பூசல்​களில் ஈடு​படு​வர்​கள், வதந்தி மற்​றும் வெறுப்​புணர்வை பரப்பி அமை​திக்கு குந்​தகம் விளை​விப்​பவர்​கள் மீதான வழக்​கு​களில் கூடு​தல் கவனம் செலுத்த வேண்​டும். காவல் துறை​யினர் முழு​மை​யாக செயல்பட சுதந்​திரம் அளிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில் சட்​டம்​-ஒழுங்கை பேணிப் பாது​காத்​து, நீதியை நிலை​நாட்ட வேண்​டும். இவ்​வாறு அறி​வுறுத்​தி​னார்.

இக்​கூட்​டத்​தில், தலை​மைச்​செயலர் நா.​முரு​கானந்​தம், உள்​துறை செயலர் தீரஜ்கு​மார், டிஜிபி சங்​கர் ஜிவால், பொதுத்​துறை செயலர் ரீட்டா ஹரீஷ் தாக்​கர், டிஜிபி (நிர்​வாகம்) ஜி.வெங்​கட்​ராமன், ஏடிஜிபி சட்​டம்- ஒழுங்கு டேவிட்​சன் தேவாசீர்​வாதம், சென்னை காவல் ஆணை​யர் ஆ.அருண் ஆகியோர் பங்​கேற்​றனர். காணொலிக் காட்சி வாயிலாக மத்திய மண்டல ஐஜி ஜோஷி நிர்மல் குமார், மேற்கு மண்டல ஐஜி டி.செந்தில் குமார், தெற்கு மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோர் பங்கேற்றனர்.

சமூக வலைதள பதிவு: இதனிடையே மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்ட சமூகவலை​தளப்​ப​தி​வில் கூறி​யிருப்​ப​தாவது: குற்​றங்​கள் நடக்​காமல் தடுக்க வேண்​டும். மீறி நடந்​தால் அதில் ஈடு​பட்​ட​வர் ரவுடி​யா​னாலும், அரசி​யல் பின்​புலம் கொண்​ட​வ​ரா​னாலும், காவலரே ஆனாலும் அதற்​கான தண்​டனையை பெற்​றுத் தந்து நீதி நிலை​நாட்​டப்​படும் ஆட்​சி​யாக திமுக அரசு திகழ்​கிறது.

போதைப்​பொருள், கள்​ளச்​சா​ரா​யம், பெண்​கள் பாது​காப்​பு, லாக்​கப் மரணங்​கள் போன்​றவற்​றில் யார் கடமை தவறி​னாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆய்வுக் கூட்டத்தில் வலி​யுறுத்​தினேன். இவ்​வாறு கூறியுள்​ளார்.

பதவி உயர்வு ஆணை வழங்கல்: காவலர்களுக்கான தற்​போதுள்ள பதவி நிலை உயர்​வுத்திட்​டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய காவலர்​களுக்​கான நிலை உயர்த்​துதல் ஆணை​யினை செயல்​படுத்​தும் வகை​யில், ஒவ்​வொரு மாநகர காவல் ஆணை​யரகத்துக்கு உட்​பட்ட 10 முதல்​நிலை காவலர்​கள், ஒவ்​வொரு காவல் சரகத்​துக்கு உட்​பட்ட மாவட்டங்​களில் 11 முதல் ​நிலை காவலர்​கள் என மொத்​தம் 21 முதல்​நிலை காவலர்​களுக்கு தலைமை காவலர்​களாக பதவிநிலை உயர்வு ஆணை​களை நேற்று முதல்​வர் வழங்​கி​னார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.