England Playing XI Announcement: ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடரின் 2வது டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நாளை மறுதினம் (ஜூலை 2) தொடங்குகிறது. இந்நிலையில், இங்கிலாந்து அணி இந்த 2வது போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவித்துள்ளது.
சமீப ஆண்டுகளாகவே, அதிரடி அணுகுமுறையை கையில் எடுத்திருக்கும் இங்கிலாந்து அணி, இதுபோன்று போட்டி தொடங்குவதற்கு 48 மணிநேரங்களுக்கு முன்னதாக பிளேயிங் லெவனை அறிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளது. அந்த வகையிலேயே, இங்கிலாந்து அணி அதன் பிளேயிங் லெவனை இன்று அறிவித்திருக்கிறது.
Team England: Bazball கிரிக்கெட்
பிரண்டன் மெக்கலம் – பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் கடந்த 2022ஆம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் அணியை கையிலெடுத்தார்கள். அப்போது இருந்து டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அணுகுறை வெட்டவெளிச்சமாக வெறும் அதிரடி பாணி மட்டுமே என அறிவித்துவிட்டது. இதுவரை 36 டெஸ்ட் போட்டிகளை விளையாடி அதில் 23 போட்டிகளில் வென்று, 12 போட்டிகளில் தோற்றுள்ளது. ஒரே ஒரு போட்டி மட்டுமே அதிக மழை காரணமாக டிராவில் முடிந்தது. இருப்பினும் இங்கிலாந்து அணியால் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு கூட தகுதிபெற முடியவில்லை. சொந்த மண்ணில் ஆஷஸ் தொடரை கைப்பற்ற இயலவில்லை, இந்திய மண்ணிலும் டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியவில்லை.
ENG vs IND: தொடரில் முன்னிலை வகிக்கும் இங்கிலாந்து
எனவே, இங்கிலாந்து அணி மீதான எதிர்பார்ப்பு இப்போது எகிறியிருக்கிறது. இனி மேலும் அதிரடிக்கு அந்த அணி தயாராகிவிட்டது. ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடரில் இந்திய அணி சுமார் 96 ஓவர்களுக்கு 371 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால், இங்கிலாந்து அணி 3ஆம் நாள் கடைசி செஷனில், மொத்தம் 82 ஓவர்கள் பேட்டிங் செய்து இலக்கை எட்டிப்பிடித்தது. 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றது.
ENG vs IND: முன்கூட்டியே பிளேயிங் லெவன் அறிவிப்பு
அந்த வகையில், இளம் இந்திய அணியை களத்திற்கு உள்ளேயும், களத்திற்கு வெளியேயும் அழுத்தத்திற்கு உள்ளாக்கும் முயற்சியில் ஒன்று இங்கிலாந்து அணியின் இந்த பிளேயிங் லெவன் அணி அறிவிப்பு எனலாம். இந்த வீரர்களை கொண்டுதான் நாங்கள் விளையாடப்போகிறோம், உங்களால் முடிஞ்சதை பாருங்கள் என ரீதியில் இங்கிலாந்து இருக்கிறது. அதுவும் 2வது டெஸ்ட் போட்டியின் ஸ்குவாடில் ஆர்ச்சர் சேர்க்கப்பட்டிருந்தார். எனவே, 2வது போட்டியின் பிளேயிங் லெவனில் ஆர்ச்சர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ENG vs IND: ஆர்ச்சருக்கு இடமில்லை
ஆனால், முதல் போட்டியில் வென்ற அதே அணிதான் 2வது போட்டிக்கும் தொடர்கிறது. அதே நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள், ஒரு சுழற்பந்துவீச்சாளர் என்ற பார்மட்டில் இங்கிலாந்து களமிறங்குகிறது. தேவைப்பட்டால் முதல் போட்டியை போல ரூட்டிடம் இருந்து ஓரிரண்டு ஓவர்களையும் பெற்றுக்கொள்ளலாம். ஆர்ச்சருக்கு இந்த போட்டியில் வாய்ப்பளிக்கப்படவில்லை. நான்கு வருடங்களுக்கு பின் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் ஆர்ச்சருக்கு வாய்ப்பு கிடைத்த நிலையில், பிரதான இங்கிலாந்து அணியில் அவருக்கு இடமில்லை.
Sussex அணிக்காக விளையாடிய ஆர்ச்சர் Durham அணியுடன் களமிறங்கினார். 18 ஓவர்களை வீசி 32 ரன்களை மட்டும் கொடுத்து 1 விக்கெட்டை எடுத்தார். ஆர்ச்சர் அதில் 8 ஓவர்கள் மெய்டனாகவும் வீசினார். ஆனால் அவர் இங்கிலாந்து அணி பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. கடைசியாக ஆர்ச்சர் இந்திய அணி உடன் 2021ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்காக ஆர்ச்சர் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதன் பின் ஆர்ச்சர் இன்னும் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.
ENG vs IND: பும்ராவும் இருக்க மாட்டார்…?
2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை பொறுத்தவரை பும்ரா இருக்க மாட்டார் என்றும் தகவல்கள் கூறுகின்றன. அந்த வகையில், இந்திய அணி அதன் பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்களை செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Team India Playing XI: இங்கிலாந்து அணி பிளேயிங் லெவன்
ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டோங், ஷோயப் பஷீர்.