அமெரிக்காவில் இருந்து மும்பைக்கு ரூ. 1.41 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்திய விமான ஊழியர் கைது

மும்பை, அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து நேற்று இந்தியாவின் மும்பைக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் தங்கம் கடத்தி கொண்டுவரப்படுவதாக வருவாய் புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பயணிகள், விமான ஊழியர்களிடம் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, விமானத்தில் பணியாற்றிய ஊழியரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் 1.37 கிலோ கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து விமான ஊழியரை கைது செய்த அதிகாரிகள் அவரிடமிருந்து கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இந்த தங்கத்தின் … Read more

டிஎன்பிஎல்: மதுரைக்கு எதிராக டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சு தேர்வு

சேலம், டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் சேலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 11-வது ஆட்டத்தில் மதுரை – திண்டுக்கல் அணிகள் இன்று மோதி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் திண்டுக்கல் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி, மதுரை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 1 More update தினத்தந்தி Related Tags : டிஎன்பிஎல்  மதுரை  TNPL 2025  Madurai 

விமானங்களில் இடையூறு ஏற்படுத்தும் பயணிகளுக்கு அபராதம் – இங்கிலாந்து விமான நிறுவனம் அறிவிப்பு

லண்டன், விமானங்களில் செல்லும்போது மற்ற பயணிகளுக்கு இடையூறு அளிக்கும் செயல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனால் அவசரமாக தரையிறக்கப்பட்டு விமான நிலையத்தில் கைது செய்யப்படுகின்றனர். இதற்கு விமானங்களில் அளவுக்கு அதிகமாக மது அருந்துவதே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. எனவே விமான நிலையம் மற்றும் விமானங்களில் மது அருந்துவதற்கான அதிகபட்ச அளவை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்தநிலையில் மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பதால் இறக்கி விடப்படும் பயணிகளுக்கு சுமார் ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் … Read more

பழனிசாமியுடன் பாஜக துணை தலைவர் திடீர் சந்திப்பு: முருக பக்தர் மாநாட்டுக்கு அழைத்ததாக தகவல்

சேலம்: அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமியை சேலத்​தில் பாஜக மாநிலத் துணைத் தலை​வர் கே.பி.​ராமலிங்​கம் நேற்று சந்​தித்​துப் பேசி​னார். சேலம் நெடுஞ்​சாலை நகரில் உள்ள பழனி​சாமி​யின் இல்​லத்​துக்​குச் சென்ற பாஜக மாநிலத் துணைத் தலை​வர் கே.பி.​ராமலிங்​கம், அவருடன் பல்​வேறு விஷ​யங்​கள் குறித்து பேசி​னார். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் ராமலிங்​கம் கூறிய​தாவது: தமிழகத்​தில் ‘நடந்​தாய் வாழி காவிரி’ திட்​டம் மூலம் காவிரி ஆற்​றில் கலக்​கக்கூடிய கிளை நதி​கள், அதே இடத்​தில் சுத்​தப்​படுத்​தப்​படும் திட்​டத்​துக்கு ரூ.11,900 கோடி மதிப்​பீடு செய்​யப்​பட்​டுள்​ளது. இதற்கு … Read more

குஜராத் விமான விபத்தில் என்ன நடந்தது? – விமான போக்குவரத்து துறை விளக்கம்

குஜராத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் என்ன நடந்தது என்பது பற்றி விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, செயலாளர் சமீர் குமார் சின்ஹா ஆகியோர் நேற்று விளக்கம் அளித்தனர். குஜராத்தின் அகமதாபாத் நகரில் கடந்த 12-ம் தேதி அன்று லண்டன் புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. இதில் பயணிகள், விமானம் விழுந்த விடுதியில் இருந்த மருத்துவர்கள் உட்பட மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மத்திய … Read more

ராஜஸ்தான், மத்தியபிரதேசத்தில் என்.ஐ.ஏ. சோதனை

ஜெய்ப்பூர், ராஜஸ்தா மற்றும் மத்தியபிரதேசத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) இன்று அதிரடி சோதனை நடத்தியது. மத்தியபிரதேசத்தின் போபாலில் 3 இடங்கள் , ராஜஸ்தானின் ஜலாவாரில் 2 இடங்கள் என மொத்தம் 5 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. தடைசெய்யப்பட்ட ஹிப்ஸ் உட் தஹிர் என்ற தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பவர்களாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சொந்தமான இடங்கள் இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனையில் கைது … Read more

டி.என்.பி.எல். கிரிக்கெட்: கோவை அணியை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

சேலம், 8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் நடந்து முடிந்தன. இந்நிலையில், தொடரின் 2வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று இரண்டு … Read more

துபாயில் 67 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

துபாய், துபாய் மரினா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளன. இங்குள்ள ‘மரினா பின்னகிள்’ என்ற 67 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தீயணைப்புத்துறையினர் மற்றும் அவசர மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இந்த குழுவினர் கட்டிடத்தில் உள்ள 764 வீடுகளில் தங்கியிருந்த 3 ஆயிரத்து … Read more

2026 தேர்தலில் பழனிசாமிதான் முதல்வராவார்: நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிதான் முதல்வராவார் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். மதுரையில் ஜூன் 22-ம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக திருவாரூரில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ.விநாயகம், பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்டத் தலைவர் வி.கே.செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் … Read more

‘தக் லைஃப்' தடைக்கு எதிரான வழக்கு: கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி / பெங்களூரு: நடிகர் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ திரைப்படத்துக்கு தடை விதித்தது தொடர்பாக‌ கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னையில் அண்மையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில் ‘த‌மிழில் இருந்து கன்னட மொழி பிறந்தது’ என குறிப்பிட்டார். இதற்கு கன்னட அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த கருத்துக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காததால், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை இந்த திரைப்படத்தை … Read more