பாமகவுக்கு விசுவாசமாக இருக்கிறேன்; கட்சி மாறுவதாக கூறி கொச்சைப்படுத்த வேண்டாம்: ஜி.கே.மணி வேதனை

கட்சி மாற உள்ளதாகக் கூறி என்னை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார். தைலாபுரத்தில் நிறுவனர் ராமதாஸை நேற்று சந்தித்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராமதாஸ்-அன்புமணி இடையேயான கருத்து வேறுபாடு விரைவில் சரியாகிவிடும். நான் பாமகவில் இருந்து விலகி, வேறொரு கட்சியில் சேரப்போவதாக கூறுகின்றனர். கட்சிக்கு விசுவாசமாக, உண்மையாக இருக்கும் என்னை கொச்சைப்படுத்துவது வேதனை அளிக்கிறது. பல பொறுப்புகளில் இருந்தபோதும் இதுவரை எந்த விமர்சனத்துக்கும் உள்ளானதில்லை. அதிமுகவில் இணைந்தால் வாரியத் தலைவர் … Read more

பிரதமர் மோடிக்கு 'தர்ம சக்கரவர்த்தி' பட்டம்: ஜெயின் துறவி வித்யானந்த் நூற்றாண்டு விழாவில் கவுரவம்

ஜெயின் துறவி வித்யானந்த் நூற்றாண்டு விவாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘தர்ம சக்கரவர்த்தி’ பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஜெயின் துறவி ஆச்சார்ய வித்யானந்த் மஹராஜ் கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ஷெட்பல் கிராமத்தில் கடந்த 1925-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி பிறந்தார். நவீன இந்தியாவின் புகழ்பெற்ற ஜெயின் துறவிகளில் ஒருவராக விளங்கினார். ஜைன மத கொடி மற்றும் சின்ன வடிவமைப்பில் இவருக்கு முக்கிய பங்கு உள்ளது. இந்நிலையில், வித்யானந்தின் நூற்றாண்டு (பிறந்த நாள்) விழா அடுத்த … Read more

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் அழிக்கப்பட்ட தீவிரவாத முகாம்களை மீண்டும் கட்டுகிறது பாகிஸ்தான்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்த தீவிரவாத முகாம்களை, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டும் பணியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் லுனி, புத்வல், திபு போஸ்ட், ஜமில் போஸ்ட், உம்ரன்வாலி, சப்ரார் பார்வர்ட், சோட்டா சாக் மற்றும் ஜங்லோரா ஆகிய இடங்களில் செயல்பட்ட தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு வீசி அழித்தன. தற்போது இந்த இடங்களில் … Read more

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பிரதமர் மோடியுடன் உரையாடினார் சுபான்ஷூ சுக்லா! வீடியோ

டில்லி: சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றுள்ள இந்திய விண்வெளி வீரர்,  கேப்டன் சுபான்ஷூ சுக்லா, விண்வெளியில் இருந்து வெப்கேஸ்ட் மூலம் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடினார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், இந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு பதிவிட்டுள்ளார். அதில் , “சுபன்ஷு சுக்லாவுடனான பிரதமர் மோடியின் உரையாடல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐ.எஸ்.எஸ்) உள்ள முழு குழுவினரையும் உற்சாகப்படுத்தியது மட்டுமல்லாமல், முழு இஸ்ரோ குழுவிற்கும் மிகப்பெரிய உந்துதலாகவும் உள்ளது” … Read more

ஒவ்வொரு தொகுதியிலும் 2 லட்சம் வாக்குகள்; விஜய் தமிழக முதல்வராவார்: தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் நம்பிக்கை

தென்காசி: தமிழக வெற்​றிக் கழகத்​துக்கு ஒவ்வொரு தொகுதியிலும் 2 லட்​சம் வாக்​கு​கள் உள்​ள​தால், விஜய் தமிழக முதல்​வ​ராவது உறுதி என்று அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் ஆனந்த் கூறி​னார். தவெக தலை​வர் விஜய் பிறந்த நாளை முன்​னிட்​டு, தென்​காசி மாவட்​டம் சங்​கரன்​கோ​விலில் கட்சி பொதுக்​கூட்​டம் மற்​றும் நலத்​திட்ட உதவி​கள் வழங்​கும் விழா நேற்று இரவு நடை​பெற்​றது. இதில் பொதுச் செய​லா​ளர் ஆனந்த் பேசி​ய​தாவது: தவெக முன்​னேறிக் கொண்​டிருக்​கிறது. சாதாரண மக்​கள், தொழிலா​ளர்​கள் நம்​மிடம் உள்​ளனர். நமக்கு விலாசம், மூச்சு … Read more

மேற்கு வங்க மாணவிக்கு பாலியல் கொடுமை: சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவு; 4 பேர் கைது

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்​தில் தெற்கு கொல்​கத்தா சட்​டக் கல்​லூரி அமைந்​துள்​ளது. இதில் பயிலும் மாணவி கடந்த 25-ம் தேதி கூட்டு பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. இது தொடர்​பாக அந்த மாணவி கஸ்பா காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​துள்​ளார். அதில், ‘‘தேர்வு விண்​ணப்​பத்தை பூர்த்தி செய்​வது தொடர்​பாக கல்​லூரி ஊழியர் மனோஜித் மிஸ்​ராவை சந்​தித்​தேன். அப்​போது தன்னை திரு​மணம் செய்து கொள்​ளு​மாறு அவர் என்​னிடம் கூறி​னார். இதற்கு மறுப்பு தெரி​வித்​தேன். பின்​னர், 2 மாணவர்​களை அழைத்து … Read more

ஈரானில் உயிரிழந்த விஞ்ஞானிகளுக்கு இறுதிச் சடங்கு

டெஹ்ரான்: ஈரான் அணு ஆயுதம் தயாரிப் பதை தடுக்க இஸ்​ரேல் தாக்​குதல் நடத்​தி​யது. இஸ்​ரேல் தாக்​குதலில் ஈரானின் முக்​கிய​மான ராணுவ தளப​தி​கள், அணுசக்தி துறை​யில் ஈடு​பட்டு வந்த விஞ்​ஞானிகள் பலர் கொல்​லப்​பட்​டனர். இஸ்​ரேல் தாக்​குதலில் மேஜர் ஜெனரல் மொகம்​மது பஹெரி, கமாண்​டர் உசைன் சலாமி, அணுசக்தி விஞ்​ஞானி மொகம்​மது மெஹ்தி டெஹ்​ரான்சி உட்பட முக்​கிய நபர்​கள் பலர் உயி​ரிழந்​தனர். தற்​போது போர் நிறுத்​தம் அறிவிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், உயி​ரிழந்த ராணுவ கமாண்​டர்​கள், விஞ்​ஞானிகளின் உடல்​களுக்கு நேற்று ஈரான் அரசு … Read more

மதுரை காமராசர் பல்கலை. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தகுதியானவர்தான்: நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் அமைச்சருக்கு கடிதம்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தற்போதைய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகள், பல்கலைக்கழக சட்டங்களின்படி தகுதியானவர். இதுகுறித்து தவறான விளக்கமளிக்கும் ஆசிரியர் சங்கத்தினரை கண்டிக்க வேண்டும் என மதுரை காமராசர் பல்கலைக்கழக நிர்வாக அலுவலர்கள் சங்கம் உயர்கல்வித் துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மதுரை காமராசர் பல்கலைக்கழக நிர்வாக அலுவலர்கள் சங்க தலைவர் பெ.முருகன், செயலாளர் கோ.சுந்தரமூர்த்தி ஆகியோர் உயர்கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தற்போதைய … Read more

புதிய இருசக்கர வாகனங்களுக்கு 2 ஹெல்மெட் கட்டாயம்: விதிகளை திருத்த மத்திய அரசு முடிவு

புதிய இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு, வாகன உற்பத்தியாளர்கள் இரண்டு ஹெல்மெட்களை வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதுபோல ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதிகளை நடைமுறைப்படுத்த மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-ல் திருத்தம் செய்ய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: புதிய திருத்தங்கள் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்ட 3 மாதங்களில் இந்த … Read more

தலிபான் தாக்குதலில் பாகிஸ்தானில் 16 வீரர்கள் உயிரிழப்பு

வசிரிஸ்தான்: பாகிஸ்​தானின் கைபர் பக்​துன்​குவா, பலுசிஸ்​தான் ஆகிய பகு​தி​களில் அரசுக்கு எதி​ராக பாகிஸ்​தான் தலி​பான் அமைப்​பினர் போராடி வரு​கின்​றனர். இந்​நிலை​யில் வடக்கு வசிரிஸ்​தான் மாவட்​டத்​தில், பாகிஸ்​தான் தலி​பான் தீவிர​வாதி ஒரு​வர் நேற்று வெடிபொருட்​களு​டன் வாக​னத்தை ஓட்டி வந்து ராணுவ வாக​னங்​கள் மீது மோதி​னார். இந்த தாக்​குதலில் 16 ராணுவ வீரர்​கள் உயி​ரிழந்​தனர். 29 பேர் காயம் அடைந்​தனர். Source link