ஈரானுக்கு அணு ஆயுதங்களை வழங்க பல நாடுகள் தயாராக உள்ளன: ரஷ்ய முன்னாள் அதிபர் மெத்வதேவ் தகவல்

ஈரானிய அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியதைத் தொடர்ந்து ஈரானுக்கு தேவையான அணு ஆயுதங்களை வழங்க பல நாடுகள் தயாராக உள்ளதாக ரஷ்யாவின் முன்னாள் அதிபரும் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணை தலைவருமான திமித்ரி மெத்வதேவ் தெரிவித்துள்ளார். இதுகுறி்தது அவர் மேலும் கூறியதாவது: ஈரானை தாக்கியதன் மூலம் மத்திய கிழக்கில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புதிய போரை தொடங்கி வைத்துள்ளார். அமைதிக்காக பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் அவர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது வருந்தத்தக்கது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை எந்தவொரு … Read more

நாளை இந்திய வீரர் விண்வெளி பயணம்

டெல்லி நாளை இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா விண்வெளிப்பயணம் மேற்கொள்வதாக நாசா அறிவித்துள்ளது.’ பால்கன்-9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘ஆக்சியம் ஸ்பேஸ்’ என்ற தனியார் நிறுவனத்தின் ‘ஆக்சியம் -4’ மனித விண்வெளி பயணத்திற்கான ‘ஸ்பேஸ் எக்ஸ் டிராகன்’ விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஏவ திட்டமிடப்பட்டது. இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் செல்ல இருந்த  நிலையில் பலமுறை இந்த விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், … Read more

தமிழகம் நிதி நெருக்கடியில் உள்ளதா? – அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: பணப்பலன்கள் வழங்கக்கோரி ஏராளமான வழக்குகள் தொடரப்படுவதால், தமிழகத்தின் நிதிநிலை நெருக்கடியில் உள்ளதா? என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் சமீபத்தில் கோரப்பட்டது. இந்த டெண்டரில் பங்கேற்று ஒப்பந்தம் பெற்ற கேடிவி ஹெல்த் ஃபுட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், சமையல் எண்ணெய்யை விநியோகம் செய்தது. இந்த வகையில் ரூ.141 கோடியே 22 லட்சத்தை தமிழக அரசு தங்களுக்கு … Read more

கர்நாடகாவின் வீட்டு வசதி திட்டத்தில் சிறுபான்மையினருக்கு 15% இட ஒதுக்கீடு

கர்நாடகாவில் வீட்டு வசதி திட்டத்தில் சிறுபான்மையினருக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அண்மையில் பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறியதாவது: கர்நாடக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து விதமான வீட்டு வசதி திட்டங்களில் முஸ்லிம், கிறிஸ்தவர், பவுத்தர் உள்ளிட்ட அனைத்து மத சிறுபான்மையினருக்கும் … Read more

ஈரான்- இஸ்ரேல் எக்காரணத்தை கொண்டும் இனி தாக்குதல் நடத்தக் கூடாது: ட்ரம்ப் எச்சரிக்கையும் பின்னணியும்! 

டெஹ்ரான்: உலகையே அச்சுறுத்திக் கொண்டிருந்த நிலையில் ஈரான்-இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். அணுகுண்டு தயாரிக்க ஈரான் முயற்சிப்பதாக அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், கடந்த 13-ம் தேதி ஈரானின் அணுசக்தி தளங்களை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் திடீர் தாக்குதல் நடத்தின. இதில் 4 அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. கடந்த 22-ம் தேதி அமெரிக்க போர் விமானங்கள் ஈரானின் போர்டோ, நடான்ஸ், … Read more

ஆந்திர பெண் விண்வெளிக்கு செல்கிறார்

மேற்கு கோதாவரி ஆந்திர மாநிலத்தை சேர்ந்த டாங்கெட்டி ஜாஹ்ன்வி என்னும் பெண் விண்வெளிக்கு செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளார்/ ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலகொல்லுவை சேர்ந்தவர் டாங்கெட்டி ஜாஹ்ன்வி. விண்வெளி வீரரான இவர் 2029-ம் ஆண்டு விண்வெளிக்கு பயணிக்க உள்ளார். மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியலில் பட்டதாரியான ஜாஹன்வி, நாசாவின் மதிப்புமிக்க சர்வதேச வான் மற்றும் விண்வெளித்திட்டத்தை வெற்றிகரமாக முடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அமெரிக்காவை தளமாக கொண்ட டைட்டனின் … Read more

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடலூர் கூத்தப்பாக்கத்தில் தேவநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் செயல்படும் தனியார் பள்ளியை அகற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 7 அதிகாரிகள் ஜூலை 10-ல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமாக, கூத்தப்பாக்கத்தில் பல கோடி மதிப்பிலான 6.10 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு அமைந்துள்ள புனித … Read more

தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஆபரேஷன் சிந்தூர் சிறந்த உதாரணம்: பிரதமர் மோடி

தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை ஆபரேஷன் சிந்தூர் உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளதாக பிரதமர் நேரந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆன்மீக குருவும் சமூக சீர்திருத்தவாதியுமான ஸ்ரீ நாராயண குரு மற்றும் மகாத்மா காந்தி இடையிலான உரையாடலின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து மேலும் கூறியதாவது: இந்தியர்களை ரத்தம் சிந்தவைக்கும் தீவிரவாதிகளுக்கு உலகின் எந்த மறைவிடமும் பாதுகாப்பானது அல்ல என்பதை நாம் நிரூபித்துக்காட்டியுள்ளோம். இந்தியர்களை தாக்கும் தீவிரவாதிகள் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அவர்கள் … Read more

காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் உயிரிழப்பு

காசா: இஸ்​ரேல் மீது கடந்த 2023 அக்​டோபரில் ஹமாஸ் தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலை தொடர்ந்​து, காசா​வில் அந்த அமைப்​பினர் மீது இஸ்​ரேல் தாக்​குதல் தொடங்​கியது. தற்​போது ஈரானுடன் இஸ்​ரேல் போரிட்டு வரும் நிலை​யிலும் காசா​வில் தாக்​குதலை தொடர்​கிறது. இந்​நிலை​யில் மத்​திய காசா​வின் சலா அல்​-​தின் சாலை​யில் உணவுப் பொருளுக்​காக காத்​திருந்த நூற்​றுக்​கணக்​கான பாலஸ்​தீனர்​கள் மீது இஸ்​ரேலிப் படைகளும் டிரோன்​களும் நேற்று காலை​யில் தாக்​குதல் நடத்​தி​ய​தாக தகவல்​கள் தெரிவிக்​கின்​றன. இதுகுறித்து நுசேரத் அகதி​கள் முகாமில் அமைந்​துள்ள அவ்தா மருத்​து​வ​மனை … Read more

புதுச்சேரி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் : ஊழியர்கள் கைது

புதுச்சேரி புதுச்சேரியில் பொதுப்பணித்துறை அலுவலகம் மீது தக்காளி வீசி ஆர்ப்பாட்டம் செய்த ஊழியர்கல் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் 2015-ம் ஆண்டு பொதுப்பணித்துறையில் 2642 பேர் பணிக்கு அமர்த்தபட்டனர். தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது பணிக்கு அமர்த்தபட்டதால் தேர்தல் ஆணையத்தால் 2016 ஆம் ஆண்டு 2642 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக இவர்களுக்கு பணி வழங்கவில்லை.  இந்த … Read more