சென்னை: சிவகங்கை காவல் துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் உயிரிழப்புக்கு வலிப்பு நோய் காரணம் என எஃப்ஐஆரில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டி உள்ள எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, இந்த கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதுபோல, காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட அஜித் மரணம் குறித்து, இரட்டை வேட முதல்வர் ஆட்சியில் நியாயம் கிடைக்காது என்றும், இந்த காவல் நிலைய கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் […]
