பர்மிங்காம்,
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லீட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டனில் நாளை தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களே மாற்றமின்றி இடம் பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து அணி விவரம் பின்வருமாறு:- ஜாக் கிராலி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜாமி சுமித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங், சோயிப் பஷீர்.