மோகன் பாபு தயாரிப்பில் அவரின் மகன் விஷ்ணு மஞ்சு, பிரபாஸ், அக்ஷய் குமார், மோகன் லால், காஜல் அகர்வால், சரத்குமார் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ‘கண்ணப்பா’.
இந்நிலையில் நடிகர் விஷ்ணு மஞ்சுவிற்கு பூங்கொத்துடன் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருக்கிறார் நடிகர் சூர்யா.

அவர் அனுப்பி இருக்கும் வாழ்த்துச் செய்தியில், “அன்புச் சகோதரர் விஷ்ணுவுக்கு இந்த அற்புதமான மைல்கல்லை எட்டியதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுடைய ஆர்வம், கடின உழைப்பு, மற்றும் எல்லா எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலும் உள்ள உங்களின் நம்பிக்கை உண்மையிலேயே பலனளித்திருக்கிறது.
பல இதயங்களைத் தொடும் ஒரு படைப்பை உருவாக்கியதற்காக உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். மேலும் வெற்றிகளை அடைய வாழ்த்துகிறேன்” என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
Big brother @Suriya_offl ! Thank you so much for the flowers and more so the message.
I continue to look at your work for inspiration and today getting such a message from you is one of the biggest highlight. Love you my big brother. pic.twitter.com/C59GiUyGCM
— Vishnu Manchu (@iVishnuManchu) June 30, 2025
இதனைத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் விஷ்ணு மஞ்சு, ” உங்கள் வாழ்த்து செய்திக்கு மிக்க நன்றி. உங்களிடமிருந்து இப்படியான ஒரு வாழ்த்து செய்தி கிடைத்தது என் வாழ்க்கையின் மிகப்பெரிய தருணங்களில் ஒன்று. என் அன்பு அண்ணா, உங்களை நேசிக்கிறேன்” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…