சென்னை: தமிழ்நாட்டின் ‘சட்டம் ஒழுங்கு நிலை’ குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய எமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல்துறையினர் புகார் கொடுக்க வருகின்ற பொதுமக்களிடமும் கண்ணியத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று (30.6.2025) தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் உள்ளிட்ட காவல்துறை உயர் அலுவலர்களுடன் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு செய்ததோடு, […]
