பிரிஸ்டல்,
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் நாட்டிங்காமில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 97 ரன் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பிரிஸ்டலில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 11 மணிக்கு நடக்கிறது.
தொடக்க ஆட்டத்தில் பொறுப்பு கேப்டன் மந்தனாவின் சதமும், ஸ்ரீசரனியின் சுழல் ஜாலமும் (4 விக்கெட்) வெற்றியை எளிதாக்கியது. இதனால் நமது அணியினர் கூடுதல் நம்பிக்கையுடன் இறங்குவார்கள். ஆனால் உள்ளூரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க நாட் சிவெர் தலைமையிலான இங்கிலாந்து அணி தீவிரம் காட்டுவதால்,விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.