கலாச்சாரம், ஆயுர்வேதம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இந்தியா – கானா இடையே 4 ஒப்பந்தம் கையெழுத்து

அக்ரா: அரசுமுறை பயணமாக கானா நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. இரு நாடுகள் இடையே ஆயுர்வேதம், பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பிரேசில் நாட்​டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஜூலை 6, 7-ம் தேதி​களில் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு நடை​பெற உள்​ளது. இதில் பங்​கேற்க செல்​லும் வழி​யில் கானா, டிரினி​டாட் அன்ட் டொபாகோ, அர்​ஜென்​டி​னா, நமீபியா ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி சுற்​றுப்பயணம் மேற்கொள்கிறார்.

முதல்​கட்​ட​மாக, மேற்கு ஆப்​பிரிக்க நாடான கானா தலைநகர் அக்​ரா​வுக்கு பிரதமர் மோடி கடந்த 2-ம் தேதி சென்​றார். கானா அதிபர் ஜான் டிராமணி மகாமாவை அவர் நேற்று சந்தித்தார். அப்​போது இரு நாடுகள் இடையே கலாச்​சா​ரம், தரநிலை சான்​று, ஆயுர்​வேதம், பாரம்​பரிய மருத்​து​வம் தொடர்​பாக 4 முக்கிய ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின. பின்​னர், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்​போது, பிரதமர் மோடி பேசி​ய​தாவது:

30 ஆண்டு இடைவெளிக்​கு பிறகு கானா​வுக்கு வந்துள்ள இந்​திய பிரதமர் என்ற பெருமை எனக்கு கிடைத்​துள்ளது. அதிபரே விமான நிலை​யத்​துக்கு வந்து என்னை வரவேற்​றது நெகிழ்ச்சி அளிக்​கிறது. இந்​தி​யா, கானா நாடு​களின் சுதந்​திர போராட்​டம் பல்​வேறு நாடு​களின் விடுதலைக்கு வித்​திட்​டது. கானாவை கட்​டி​யெழுப்​பும் பயணத்​தில் இந்​தியா ஆதர​வாள​ராக மட்​டுமின்றி, சக பயணி​யாக​வும் இருக்​கும். இரு​ நாடு​கள் இடையி​லான வர்த்​தகம் 3 பில்​லியன் அமெரிக்க டாலர்​களை தாண்​டி​யுள்​ளது. இந்​திய நிறு​வனங்​கள் கானா​வின் 900 திட்​டங்​களில் 2 பில்லியன் அமெரிக்க டாலர்​களை முதலீடு செய்​துள்​ளன.

அடுத்த 5 ஆண்​டுகளில் இருதரப்பு வர்த்​தகம் இரட்​டிப்​பாகும். கானா​வுடன் யுபிஐ டிஜிட்​டல் பண பரிவர்த்தனை தொழில் நுட்பத்தை பகிர்ந்து கொள்ள இந்​தியா தயா​ராக உள்​ளது. கானா​வுக்​கான உதவித் ​தொகைகளை இரட்​டிப்​பாக்க முடிவு செய்​துள்​ளோம். கானா இளைஞர்​களின் தொழிற்​கல்விக்​காக திறன் மேம்​பாட்டு மையம் தொடங்​கப்​படும். ‘பீட் கானா’ என்ற வேளாண் திட்​டத்​துக்கு இந்​தியா ஆதரவு அளிக்​கும். மக்​கள் மருந்தகங்கள் மூலம் கானா மக்​களுக்கு மலிவு விலை​யில் மருந்​துகள் வழங்​கப்​படும்.

ராணுவ பயிற்​சி, கடல்​சார் பாது​காப்​பு, ராணுவ தளவாடங்​கள், இணை​யதள பாது​காப்பு ஆகிய துறை​களில் இரு நாடு​கள் இடையி​லான ஒத்​துழைப்பு விரிவுபடுத்​தப்​படும். கனிமங்​களை ஆராய்​வது, சுரங்​கங்​கள் அமைப்பதற்கு இந்திய நிறு​வனங்​கள் முழு ஆதரவு அளிக்​கும். கானாவின் மரபு​சாரா எரிசக்தி திட்​டங்களுக்கு இந்​தியா முழு ஒத்துழைப்பு அளிக்​கும். பல ஆண்​டு​களாக, இந்​திய ஆசிரியர்​கள், மருத்​து​வர்​கள், பொறி​யாளர்​கள் கானா​வில் பணி​யாற்றி வரு​கின்​றனர். கானா​வின் பொருளா​தார, சமூக முன்னேற்​றத்​துக்கு இந்​திய சமூகம் பங்​களித்து வரு​கிறது. இந்​தி​யாவுக்கு வருகை தருமாறு கானா அதிபருக்கு அழைப்பு விடுக்​கிறேன்.இவ்​வாறு மோடி பேசி​னார்.

கரோனா பெருந்​தொற்று காலத்​தில் கரோனா தடுப்​பூசிக்கு பெரும் தட்​டுப்பாடு நில​வியது. அந்த இக்​கட்​டான நேரத்​தில், கானா​வுக்கு 6 லட்​சம் கரோனா தடுப்​பூசிகளை இந்தியா அனுப்பிவைத்தது. பிரதமர் மோடி​யின் ஆட்சிக் காலத்​தில் இரு நாட்டு வர்த்தகம் அதிக வளர்ச்சி அடைந்து வரு​கிறது. கானா​வின் பல்​வேறு திட்​டங்​களுக்கு இந்​தியா ஆதரவு அளித்து வரு​கிறது. இந்நிலையில், கானா நாட்டின் மிக உயரிய ‘ஆபீசர் ஆஃப் தி ஆர்​டர் ஆஃப் தி ஸ்டார்’ விருதை பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் ஜான் டிராமணி மகாமா நேற்று வழங்​கி​னார். கானா நாட்​டின் வளர்ச்​சிக்கு உதவும் தனி​நபர்​களுக்கு இந்த விருது வழங்​கப்​படுவது குறிப்பிடத்தக்கது.

‘கானா நாட்டின் உயரிய விருது எனக்கு வழங்​கப்​பட்டிருப்​பது பெருமை அளிக்கிறது. 140 கோடி இந்​தியர்களின் சார்​பாக இதை ஏற்​றுக் கொள்​கிறேன். இதன்மூலம் எனது பொறுப்பு அதிகரித்துள்ளதாக உணர்கிறேன்’ என்று பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார். கானா நாடாளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியபோது, ‘‘ஜனநாயகத்தின் தாயாக இந்தியா விளங்குகிறது. அதிவேகமாக வளரும் பொருளாதாரமாக திகழ்கிறது. விரைவில் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும். வளமான, நிலையான உலகத்தை படைக்க வலுவான இந்தியா முக்கிய பங்களிக்கும். இது தொழில்நுட்ப புரட்சியுகம். இதில் இந்தியா முன்னோடியாக உள்ளது. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை உள்ளடக்கிய ‘குளோபல் சவுத்’ நாடுகளின் செல்வாக்கு சர்வதேச அரங்கில் அதிகரித்து வருகிறது’’ என்றார்.

இந்​திய வம்​சாவளி​யினருடன்.. கானா தலைநகர் அக்​ரா​வில் இந்​திய வம்​சாவளி​யினர் கூட்டத்​தில் பிரதமர் மோடி பங்​கேற்​றார். அப்​போது, இரு நாடுகளுக்கும் நட்பு பால​மாக இந்​திய வம்​சாவளி​யினர் செயல்பட வேண்​டும் என்று கேட்​டுக் கொண்​டார். கானா​வில் வசிக்கும் 15 ஆயிரத்துக்கும் மேற்​பட்ட இந்​தி​யர்​களின் பாது​காப்பை உறுதி செய்​யும் அதிபர் மகா​மாவுக்கு நன்றி தெரி​வித்​தார். கானா பயணத்தை முடித்துக்கொண்டு, டிரினிடாட் அன்ட் டொபாகோ நாட்டின் தலைநகர் போர்ட் ஆப் ஸ்பெயினுக்கு பிரதமர் மோடி நேற்று புறப்பட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.