Sukanya Samriddhi Yojana: பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), அதன் அதிகாரப்பூர்வ மொபைல் வங்கி தளமான PNB ONE செயலி மூலம் சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) கணக்குகளைத் திறக்க டிஜிட்டல் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சம், ஏற்கனவே உள்ள PNB வாடிக்கையாளர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்காக SSY கணக்குகளை தங்கள் வீடுகளில் இருந்தபடியே ஈஸியாக திறக்க அனுமதிக்கிறது. இனி நேரடியாக வங்கி கிளைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) என்றால் என்ன?
SSY என்பது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் சிறு சேமிப்புத் திட்டமாகும், இது பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தையின் எதிர்கால கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்காக சேமிக்க கொண்டு வரப்பட்ட திட்டம். இது கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள், பிரிவு 80C இன் கீழ் வரிச் சலுகைகள் மற்றும் முதிர்ச்சியின் போது வரி இல்லாத வருமானத்தை வழங்குகிறது. இந்தத் திட்டம் 8% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
சுகன்யா சம்ரிதி கணக்கை யார் திறக்கலாம்?
வங்கிக் கிளைக்குச் செல்லாமல் தங்கள் பெண் குழந்தைக்காக SSY கணக்கைத் திறக்க விரும்பும் தற்போதைய PNB வாடிக்கையாளர்களுக்கு இந்தப் புதிய அம்சம் கிடைக்கிறது. இந்த செயல்முறை முற்றிலும் டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்படுகிறது, இது வசதியானது மற்றும் நேரத்தை மிச்சப்படுத்துகிறது.
சுகன்யா சம்ரிதி கணக்கை ஆன்லைனில் எவ்வாறு திறப்பது?
PNB ONE செயலி மூலம் SSY கணக்கைத் திறப்பதற்கான வழிமுறைகள்
– உங்கள் மொபைல் சாதனத்தில் PNB ONE செயலியைத் திறந்து உள்நுழையவும்
– பிரதான மெனுவிலிருந்து ‘Services’ விருப்பத்தைத் கிளிக் செய்யவும்
-‘Govt. Initiative’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
– ‘Sukanya Samriddhi Account Opening’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
– செயல்முறையை முடிக்க ஸ்கிரீனில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
கணக்கைத் திறப்பது மட்டுமே இப்போது ஆன்லைனில் உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். இந்த திட்டத்தில் பகுதி தகையை திரும்பப் பெறுதல், கணக்கை குளோஸ் செய்தல் அல்லது முன்கூட்டியே மூடுதல் போன்ற சேவைகள் ஆன்லைனில் இல்லை. இதற்கு வங்கி கிளைக்கு நீங்கள் நேரடியாக செல்ல வேண்டும்.